Posts Tagged ‘ நால்வர் ’

சைவத்திருமுறைகள் தொடரட்டும்…

இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருm சொத்தான சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப் படவில்லை என்பது தெளிவு... பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதே இன்றுள்ள வினா. இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது... சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே.... [மேலும்..»]

அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் 22-நவம்பர் அன்று சிவனடி சேர்ந்தார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அண்மையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவு அதிகரிக்கவே உயிர் பிரிந்தது. சுமார் 600 வருடங்களுக்கு முன்னர் தோன்றிய சைவ மடம் இது. நெடிய பாரம்பரியமும் சிறப்பும் கொண்ட திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 23 வது பட்டத்தை அலங்கரித்தவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆவார். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றி, ஆயிரக் கணக்கான சுவடிகளைப் பாதுகாத்தும், தமிழ்ப்... [மேலும்..»]

திருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்

“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று... மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்த சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்.. [மேலும்..»]