எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?

எல்லா மதங்களும் ஒன்று, ஒரே நோக்கத்தைக் கொண்டவை. எல்லாம் ஒன்றுதான் என்பதுபோன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால், இது உண்மையா? நமது இந்து மதத்தைப் போன்றவைதானா மற்ற மதங்களும்? நமது நோக்கத்தைப் போன்றதுதானா மற்ற மதங்களின் குறிக்கோள்களும்? – இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் உரைநிகழ்த்தவுள்ளார்
தொழுதகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.

தினம்: ஜூலை 20, 2008 (ஞாயிறு) மாலை 6:30 லிருந்து 8:30 வரை.

View More எல்லா மதங்களும் ஒரே நோக்கத்தை கொண்டிருக்கின்றனவா?

மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்

2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை ‘அம்மா’ ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, ‘அரவணைக்கும் ஞானி’ (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

View More மாதா அமிர்தானந்தமயி அவர்கள் – அமெரிக்கா மற்றும் கனடாவில்