Posts Tagged ‘ நிதின் கட்கரி ’

புதிய அரசு – நம்பிக்கை ஏற்படுத்தும் தொடக்கம்

பழைய ஆட்சிகளின் புளித்துபோன பாணியிலிருந்து விலகி 100 நாட்களில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை முடிவுசெய்வது, அமைச்சர்கள் தங்களது உறவினர்களுக்கு பதவி அளிக்கக்கூடாது எனும் எச்சரிக்கை ஆகியவை நல்ல தொடக்கத்தையும் பொதுமக்களான நமக்கு நம்பிக்கையையும் அளிப்பவையாக உள்ளன... ஸ்மிருதி இரானியி தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதிலளித்துள்ளார், தன்னை தான் செய்யும் பணிகளை வைத்து எடைபோடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.... அஜித்குமார் டோவல் அவர்களும் அனுபவம் வாய்ந்த செயல்வீரராக அறியப்படுகிறார். அவர் பல காலம் வடகிழக்குபகுதியிலும், காஷ்மிரிலும் பணியாற்றிய அனுபவமுடையவர், IB ன் முன்னால் தலைவர்.... [மேலும்..»]

தாமரை சங்கமம் – மகத்தான வெற்றியின் பின்னணி

பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ஆழ்ந்த ரசனையோடும், தீவிர முனைப்போடும் கூடிய கடின உழைப்பினால் நிலைசேர்த்த எண்ணிலடங்காத் தொண்டர்களையும், மாவட்ட, மாநில நிர்வாகிகளையும் நன்றியுடன் நினைக்கும் முகமாகவே இந்தக் கட்டுரை... அத்தனை ஊர்களிலிருந்தும் லட்சக் கணக்கில் திரண்ட தொண்டர் கூட்டம், அத்தனை செலவும் 100 சதம் தொண்டர்களின் கைக்காசே... [மேலும்..»]

தாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்

பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று 1996-ல் கூறியபோது யாரும் நம்பவில்லை. ஆனால் அடுத்த 6 ஆண்டுகளில் பாஜக ஆட்சிதான் செங்கோட்டையில் இருந்தது. எதுவும் சாத்தியமில்லை என்று கூறிவிட முடியாது... 6 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களோடு ஏற்கெனவே உள்ள 7 லட்சம் உறுப்பினர்களையும் சேர்த்தால்... இது கூடி களையும் கூட்டமாக இருக்காது. உறுதிமொழி மாநாடு இது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டியதன் காரணங்களை மக்களுக்கு சொல்வோம்... தமிழகத்தில் தனியொரு தலைவரை மையப்படுத்தி தான் அரசியல் சுழல்கிறது. இந்த தனி மனித மற்றும் சினிமா கவர்ச்சியை எல்லாம் மீறி பாஜக வளரும்... [மேலும்..»]

முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

December 26, 2011
By

முல்லை பெரியார் விஷயத்தில் வெளிவராத பல தகவல்கள் உள்ளன. இதில் சமூக விரோதிகளை மக்களிடமிருந்து பிரித்துக் காட்ட வேண்டிய தேவை உள்ளது. கேரளாவில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதும் பொருளாதார முற்றுகை என்ற பெயரில் போராடுவதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும். அரசியல் கட்சிகள் நிலநடுக்க பீதியைக் கொண்டு அரசியல் நடத்துவதில் ஒரு புரிந்துகொள்ளக்கூடிய நியாயம் இருக்கிறது. இதில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு என்ன வேலை? இங்கு தான் அவர்களது ஐந்தாம் படை ரகசியம் இருக்கிறது. அவர்களது வெறுப்பூட்டும் பிரசாரத்தின் அடிப்படை சபரிமலை என்பதே அது. [மேலும்..»]