Posts Tagged ‘ நிதிஷ்குமார் ’

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும் பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர். ஒரு முன்னோட்டம்: பிகார் தலைநகரமான பாட்னாவில் பாஜகவின் கர்ஜனைப் பேரணியை நடத்துவதாக அறிவிக்கப்பட்டதில்... [மேலும்..»]

நரேந்திர மோடி எனும் சாமுராய்

நரேந்திர மோடிக்கும் ராமாயண வாலிக்கும் ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. இருவரும் அசகாய பலசாலிகள், யாராலும் நேர்மையான யுத்தத்தில் தோற்கடிக்க முடியாத சக்திமான்கள். யாருடன் எதிர்த்து போரிடுகிறார்களோ அவர்களின் பலத்தை இருவரும் பெற்று விடுவார்கள். காவிய நாயகன் வாலியை போலவே காவி நாயகன் மோடியும் அத்தகைய வரம் பெற்றவர். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு களத்தில் இருப்பவர் . தேசிய அரசியலில் நரேந்திர மோடியின் எழுச்சிக்கு முன்பு வரை அரசியல் என்பது காங்கிரஸ் செய்யும் களவாணித்தனங்களை மட்டுமே மையமாக கொண்டு சுழன்று வந்தது.  ஆனால் மோடியின் தேசிய அரசியல் பிரவேசத்திற்கு பின் அனைத்தும் மோடி மையப்படுத்தப்பட்ட... [மேலும்..»]

முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்... பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்... கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற... [மேலும்..»]

மன்மோகன் சிங்குக்குப் பரிந்து சோனியா பாய்ச்சல்

மன்மோகன் சிங் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்... முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன?... ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது. [மேலும்..»]