Posts Tagged ‘ நிந்தாஸ்துதி ’

தூற்றிப் போற்றினரே! -2

"பலாப்பழத்தை நாடும் ஈபோல, மான்போலும் பார்வையுடைய மாதரின் சிற்றின்பத்தை நான் நாடுகிறேன். அதன் காரணமாக நீ என்னைப் புறக்கணித்து விடாதே ஈசா!             "அவ்வாறு கைவிட்டால் நான் உன்னை எவ்வாறெல்லாம் பழித்துரைப்பேன் தெரியுமா? நீ கடல் நஞ்சினை உண்டவன்; மழைமேகம் போலக் கறுத்த கண்டமுடையவன்; நல்லகுணம் இல்லாதவன் (குணம் இலி); என்னைப்போலும் மானிடன்; அறிவு குறைந்தவன் (தேய் மதியன்); வயதில் முதிர்ந்த பரதேசி என இவ்வாறெல்லாம் பழித்துப் பேசுவேன்," [மேலும்..»]

தூற்றிப் போற்றினரே! — 1

மூன்று பெண்கள் மூன்று அம்மானைக்காய்களைக் கொண்டு விளையாடும்போது, அதன் வேகத்திற்குப் பொருத்தமாகப் பாடல்களையும் அழகுறப் புனைந்து பாடுகிறார்கள். யார் சாமர்த்தியமாகக் கேள்வி கேட்பது, யார் சமயோசிதமாக விடை கூறுவது, யார் விடையில் இரு பொருள் பொதிந்து கூறுவது என்பதில் இவர்களுக்குள் போட்டி!! [மேலும்..»]