ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்

”ஸ்டாலின் உண்மையில் ஒரு ராக்ஷஸன். எவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும், அவரது கூட்டாளிகளின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லை. எந்நேரமும் அவர்கள் கைதுசெய்யப்படலாம், பொய் வழக்கில் மரண தண்டனை வழங்கப் படலாம்” என்று குற்றப் பத்திரிகை வாசித்தார் க்ருஷ்சேவ்…. சிறையிலிருந்து தப்பிய ஒரு பாட்டாளி, தன் பாட்டாளி நண்பனின் வீட்டில் தஞ்சம் புகலாம் என்று ஓடி வருகிறான். ஆனால் போலீஸ் அவனைத் துரத்துகிறது. பாட்டாளி நண்பனின் மனைவி கதவைத் திறக்கிறாள். தானும் பாட்டாளிகள் போராட்டத்துக்கு தன் பங்கைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்த அந்தப் பெண்….

View More ஸ்டாலினும் தமிழ் பாட்டாளிப் போராட்டக் கதைகளும்

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]

அங்கிருந்தவர்களின் உதவியால், எண்ணி நான்கே நிமிடங்களில் அவசர சிகிச்சை வண்டி வந்து, குழந்தையையும் அவன் தாயாரையும் அழைத்துக்கொண்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு விரைந்தது. அவர்கள் பின்னாலேயே என் மனைவியும், மகனும் கார் ஒன்றில் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். நான் அவர்களிடம், “பயப்படும்படியாக ஒன்றும் நடக்காது…” என்று சமாதானம் சொல்லிக்கொண்டே, என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தவர்களிடம், அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய போன், செருப்பு முதலியவைகளை எடுத்துக் கொடுத்து அவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்…. நிகழ்வுகள் நடக்கும்போது நடத்துபவனை நினைத்துக் கொண்டிருந்தால் போதும் என்பதுதான் என் தாழ்மையான எண்ணம்.

View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 8 [நிறைவுப் பகுதி]

இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7

உபதலைவர் என்னைக் கூப்பிட்டு நடு இருக்கையில் அமரச் செய்து, நடந்தது என்ன என்று என்னை விவரிக்கச் சொல்லிவிட்டு பாட ஆரம்பிக்கச் சொன்னார்கள். நானும் நடந்த மற்ற சம்பவத்தை விவரித்து விட்டு, அவர்கள் “அருணாசலமே சிவனின் நாமம்” என்ற ஈற்றடியைச் சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டு நாமாவளிப் புத்தகத்தைப் பிரித்தேன். சரியாக அப்போது வாசலில் அழைப்பு மணி அடித்தது.

View More இன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 7

நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி

அவரைப் பார்த்து புன்னகைத்த அத்வானி, ‘எப்படி இருக்கிறீர்கள்? என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு அந்த வயோதிகர், ‘எனக்கு 65 வயதாகிறது. அவர் (இந்திரா காந்தி) செய்வது எனக்கு அறவே பிடிக்கவில்லை. என்னால் இதைப் பொறுத்துக்கொள்ளமுடியாது. இதற்கு ஏதாவது செய்தாகவேண்டும் என துடிக்கிறேன். நான் இனியும் தொடர்ந்து வாழவிரும்பவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். நான் சாகத்துணிந்துவிட்டேன். நான் நேரே சென்று அவரை சுட்டுக்கொல்லவும் தயாராகவும் இருக்கிறேன்’ என்று கூறினார்.

View More நெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி