Posts Tagged ‘ நியாயத்தீர்ப்பு ’

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12

<< இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கே வாசிக்கலாம் >>  ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள் அருளிய  கிறிஸ்துமதச்சேதனம் தமிழில்: சிவஸ்ரீ. விபூதிபூஷண் பகுதி 1 பதிஇயல் மெய்யன்பர்களே! பல்வேறு அலுவல்கள் காரணமாக எமது மொழிபெயர்ப்புப் பணியைத் தொடர்வதில் தடை ஏற்பட்டது. அதற்காக வருந்துகின்றேன். இறையருளும் குருவருளும் நண்பர்களுடைய ஆர்வமும், ஆசிரியர் குழுவினரின் ஊக்கமும்  இந்த நூலின் முதல் பிரகரணமாகிய பதியியலின்  நிறைவுப்பகுதியினை மொழிபெயர்ப்பதற்கு துணை செய்திருக்கின்றன. அனைவருக்கும் எமது நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்! இந்தப்பகுதியில் பதியியலின் கடைசி இரு அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன. பரிசுத்த ஆவியின் கதை ஒன்பதாவது அத்தியாயமாகவும் திரித்துவம் பத்தாவது அத்தியாயமாக அமைந்திருக்கின்றன. ஸ்ரீலஸ்ரீ சட்டம்பி சுவாமிகள்... [மேலும்..»]

கிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 11

ஆக, ஆதிமனிதர்கள் செய்த முதல்பாவத்திற்கு எல்லாவகையிலும் ஜெஹோவாவின் தவறுகளே காரணமாக இருந்திருக்கின்றன. அத்தகையவர் கருணையுள்ளவராக தம்மைக் காட்டிக்கொண்டு தம்முடைய பிள்ளையின் தியாகத்தால் மனிதர்களின் பாவங்களைத் தாமே ஏற்றுக்கொண்டு அவர்களைத் துன்பங்களிருந்து மீட்பார் என்பது நாடகமன்றி வேறென்ன! மனிதர்களின் துன்பங்களுக்கெல்லாம் காரணமான படைப்பின் நாயகனே நீயாயத்தீர்ப்பு நாளிலே அவர்களுக்கு நீதியும் வழங்குவார் என்பதும் அநீதியல்லவா? [மேலும்..»]