Posts Tagged ‘ நியோ காந்தியம் ’

அதிகாரத்தின் முகமூடி

காந்தி தீவிர அரசியல்வாதி. அவர் ஒரு யதார்த்தவாதியும் கூட அவருடைய முக்கிய தாக்கம் கிறிஸ்தவம். அப்படி இருக்க அவரை எப்படி ஆழமான சூழலியலின் பிதாமகர் என சொல்லலாம்? அது அவருக்கு முழுக்க முழுக்க தகுதி இல்லாத ஒன்று. இப்படி காந்தியின் சூழலியல் சார்ந்த சிந்தனைகளாக முன்வைக்கப்படுபவை நிராகரிக்கப்படுகின்றன. காந்தியை குறித்து இந்துத்துவர்கள் வைக்கும் விமர்சனம் என்ன? காந்தியின் குரல் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?.... குஹா காந்தியை எத்தனை படோடபமாக முன்வைத்தாலும் அவர் உண்மையில் முன்வைப்பது நேருவைத்தான். நேரு எனும் அதிகார மைய அரசியல்வாதியின் அரசியலுக்கு குஹா அளிக்கும் ஒரு முகமூடிதான் காந்தி.... ... [மேலும்..»]

நேருவிய மனுவாதிகளுக்கு காந்திய அன்புடன் – 2

கிழக்கு வங்க அகதிகளில் பெரும்பாலானோர் நாமசூத்திரர் எனும் தலித் வகுப்புகளை சார்ந்தவர்கள். அங்குள்ள வனவாசி சமுதாயங்களை சார்ந்தவர்கள். நேருவுக்கு இவர்கள் பெரிதாகப்பட்டிருக்க மாட்டார்கள். நேரு அரசாங்கம் கிழக்கு வங்க அகதிகளை வெறுப்புடன் நடத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ரசாக்கர்கள் கன்னியாஸ்திரீகளை கொன்றால் முகம் சிவக்க சினந்த நேருவுக்கு ரஸாக்கர்கள் தொடர்ந்து இந்துக்களை கொன்றும் சூறையாடியும் வந்தது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை பாருங்கள். இதைத்தான் நேருவின் நாஸி மனநிலை என்றது... இந்த மனநிலை இன்றைக்கும் நீடிக்கிறது. நேருவிய நாளேடான தி இண்டு ஹிந்துத்துவர்களை கொன்ற போலீஸ்... [மேலும்..»]

நேருவிய மனுவாதிகளுக்கு … காந்திய அன்புடன்-1

இந்தியாவை பின்னாட்களில் கவியப் போகும் ஒரு பேரிருளைக் குறித்த முக்கிய முன் அறிவிப்பாக இந்த கடிதத்தை கருத வேண்டும். எந்த அதிகாரத்தையும் நாடியவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. எந்த அரசியல் சார்பையும் சார்ந்தவர் அல்லர் சுப்பிரமணிய சிவா. அவர் வெறும் தேசபக்தர். எளிமையான நேரடியான தேசபக்தர். அவர் மனது ஒரு விஷயத்தை தெளிவாக உணர்கிறது. பிழைக்கத் தெரியாமல் இறுதிவரை தன்னை பிணித்தொறுக்கிய நோய்க்கு மருந்துக்குக் கூட பிறரிடம் மன்றாடி வாழ்ந்த காலகட்டத்திலும் பாரத அன்னைக்கு கோவில் எழுப்ப விரும்பிய அந்த அப்பாவி தேசபக்தரின் வார்த்தைகளை கவனியுங்கள்.... [மேலும்..»]