ஊழலின் ஊற்றுக்கண் எது?

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது. ஊழலுக்கான பல உதாரணங்கள் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை சிறிது சிறிதாக ஆக்கிரமித்ததற்கு அவர்கள் லஞ்சம் கொடுத்துத்தான் அப்படிப்பட்ட பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஊழலை சர்வ சாதாரணமாக வாழ்க்கையின் ஓர் அங்கமாக எடுத்துக் கொள்ளத் துவங்கி விட்டனர். சூடான தோசைக் கல்லை அடுப்பில் இருக்கும்போது தொட்டுவிட்டு கை கொப்புளித்து, ஐயோ ஐயோ என்று அலறுபவனைப் போல ஊழல் பேர்வழிகள் எதிலாவது கைவித்து ஐயோ ஐயோ என்று அலறினால் அன்றி இவர்கள் திருந்த மாட்டார்கள்.

View More ஊழலின் ஊற்றுக்கண் எது?

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு

திமுக அரசு தமிழகத்தை முற்றிலும் சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு,  திவாலாகும்   நிலைக்கு தள்ளிவிட்டது” என்ற ஜெயலலிதாவின் கூற்று உண்மைதான். இதை சரிப்படுத்த ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தார்? கருணாநிதி இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டிகளைக் கொடுத்தார்; ஜெயலலிதாவோ, இலவசமாக கிரைண்டர், மிக்சி, ஃபேன், தாலிக்கு தங்கம், இலவச ஆடு, மாடு வழங்கிக் கொண்டிருக்கிறார். செலவுக்கு முன்னிற்கும் முதல்வர், வரவுக்கு என்ன செய்தார்? கருணாநிதி என்ன செய்தாரோ அதையே பல மடங்கு அதிகமாகச் செய்வதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?

View More சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு