Posts Tagged ‘ நீதிக்கட்சியின் மறுபக்கம் ’

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2

கொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் - இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா?... தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு... [மேலும்..»]

திராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.?

அறிவு சார், வரலாற்று சார் பண்பாட்டு அறிவு ஓட்டத்தில் மிகப்பெரிய அகழியை வெட்டி தமிழ் மக்களை கலாச்சார, பண்பாட்டு அனாதைகளாக்கி இருக்கிறது திராவிட அரசியல்.தொட்டில் குழந்தை முதல் சுடுகாடு வரை அனைத்திலும் ஊழல் செய்தும் திருடியும் சொத்து சேர்ப்பது மட்டுமே பெருமை என மக்களை மழுங்கடித்தது, சொரணை என்பதும், வெட்கம் , மானம் என்பதெல்லாம் ஏதோ அயல் கிரக வாசிகளின் மொழி என்பதாக மக்களை நம்ப செய்தது... திராவிட இயக்கத்திற்கு ஆள் சேர்க்க அவர்கள் விரித்த தூண்டில் எதிர்கலாச்சாரம் எனும் கேடு. எந்த ஒழுக்க விதியையும் மீறலாம். யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பாலுறவு கொள்ளலாம்.... [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 07

இதில் நாம் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் - நீதிக்கட்சி பெருவாரியாக வெற்றிபெற்றபோது தாழ்த்தப்பட்ட பிரதிநிதிகளை அமைச்சராக்கவில்லை என்பதைத்தான். மக்கள் செல்வாக்கு முழுவதும் இழந்துவிட்ட நிலையில் - எப்பொழுது வேண்டுமானாலும் அமைச்சரவை கலைக்கப்படலாம் என்று தெரிந்திருந்தபோதுதான் எம். சி. ராஜாவை அமைச்சராக்கியது. [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 06

ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல்லை முதன்முதலில் அமைப்பு ரீதியாக பயன்படுத்தியவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்தான். ‘திராவிடர் கழகம்’ என்ற அமைப்பை 1892ல் உருவாக்கியவர்களும் தாழ்த்தப் பட்டவர்கள்தான். தமிழகத்தில் பஞ்சமர், பறையர், தீண்டப்படாதவர் என்கிற சொற்கள் வழங்கிய நிலையில் ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல்லையே உபயோகிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் ஆதிதிராவிடர்கள். [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக - குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக - நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்...இந்த ஆணை...மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா? [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 03

மக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்த கொள்ளைக் கும்பல்களின் மொத்தக் கூட்டமைப்புதான் நீதிக்கட்சி. அன்று கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் தான். அவர்களை முன்னேற விடாமல் அடிமைப்படுத்திச் சுரண்டியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தவர்கள் நீதிக் கட்சியினர் தான். இவர்களா தாழ்த்தப் பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு என்று நீதிக்கட்சியை ஆரம்பித்தனர் ? [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 02

எப்பொழுதுமே தாழ்த்தப்பட்டவர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களை - வரலாற்றை - தாழ்த்தப்பட்டவர்களால் போராடிப் பெற்ற உரிமைகளை - நீதிக்கட்சி, ஈவேரா இவர்களுக்கு உரிமையாக்கி விடுவார் இவர். இந்த புத்தகத்திலும் அதுமாதிரியான ஒரு வரலாற்றுப் புரட்டலை செய்திருக்கிறார் எஸ். வி. ராஜதுரை. அவருடைய நோக்கம் தாழ்த்தப்பட்டத் தலைவர்களின் வரலாற்றை எழுதுவதல்ல. அனைத்துச் சாதனைகளும் நீதிக்கட்சியால் மட்டுமே பெறப்பட்டது என்று நிலைநிறுத்தவே இந்தத் தகவல்களைச் சேர்த்திருக்கிறார்... [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 01

உண்மையிலேயே நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடத்தான் தோன்றியதா?தாழ்த்தப்பட்டோரிடையே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் இல்லாது இருந்தார்களா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தும் பணியைத் தொடர்ந்து செய்து வந்ததா? நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த சாதனைதான் என்ன? [மேலும்..»]