Posts Tagged ‘ நூல் வெளியீடு ’

இலக்கியம், புத்தகம், வரலாறு, வேதம்

வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. "தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம்... [மேலும்..»]

அறிவிப்புகள்

மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க. தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கோபி சங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை இன்று (10 ஜூலை 2014) வெளியிடுகிறார்.  காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த எளிய, ஆனால் சமூக பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு தமிழ்ஹிந்து அரங்கில் நடைபெறுவதில் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இதற்காக நூலாசிரியர் கோபி சங்கர் அவர்களுக்கும் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் தமிழ்ஹிந்து சார்பில் எமது நன்றிகள். அனைவரும் வருக! திரு. கோபி சங்கர் ஸ்ரீராமகிருஷ்ணர்,... [மேலும்..»]

அறிவிப்புகள்

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்? ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது. கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச்... [மேலும்..»]

புத்தகம்

இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. ... நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர்... 2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?... [மேலும்..»]

புத்தகம், பொது

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – தமிழ்ஹிந்து புத்தக வெளியீடு

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக, எளிமையாக விடையளிக்கிறது.. சென்னை புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் அரங்கில் (ஸ்டால் எண் 76 & 77) கிடைக்கும். [மேலும்..»]

இலக்கியம், வரலாறு

ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்

ஆரம்பகாலத் தமிழ் கல்வெட்டுகள் குறித்த தீவிர ஆய்வுகள்

உலகத்தமிழ் மாநாடு சென்னையில் நடந்தது, தமிழ் அறிஞர்களின் நிகழ்வாக இல்லாது, ஓர் அரசியல் மாநாட்டு ஆரவாரத்தோடும் திருவிழா கோலாகலத்தோடும் நடத்தப்பட்டது. ஐராவதம் மகாதேவன் அளித்த ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழர் பழம்பெருமைக்கு அணிகலனாக இல்லாது போன காரணத்தால், கடும் கண்டனங்களுக்கு உள்ளாகி,...... தமிழ்நாடு சிற்றரசுகளால் ஆளப்பட்டாலும், அவர்கள் சுதந்திர அரசுகளாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசு மொழியாக, மக்கள் மொழியாக, இலக்கிய மொழியாக, சமூகம் சகல மட்டங்களிலும் கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால், தமிழ்நாட்டுக்கு ப்ராகிருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப்பேச்சுக்களில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல. கி.மு.இரண்டாம்... [மேலும்..»]