Posts Tagged ‘ நெல்லை ’

கோயில்கள், சூழலியல், நிகழ்வுகள், பண்டிகைகள்

தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

September 21, 2018
-
தாமிரபரணி புஷ்கரம்: தடை போடுகிறதா தமிழ்நாடு அரசு?

இந்த நிகழ்வானது பாரத நாடெங்கும் தொடர்ந்து நடந்து வரும் பல்வேறு புனிதநீராடல் விழாக்களிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டதல்ல.. இந்த அனைத்து மாநிலங்களிலும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் கோயில் நிர்வாகங்கள், ஆன்மீக அமைப்புகள கூடிப் பேசி பரஸ்பர ஒத்துழைப்புடன் இந்த விழாக்கள் நடந்தேறுகின்றன. முதலமைச்சர்களே கூட கலந்து கொள்கிறார்கள். அத்தகைய நல்ல முன்னுதாரணத்தை கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தின் போது தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்தது. இப்போது என்ன ஆயிற்று?.. "குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிகமான பக்தர்கள் செல்ல பாதைவசதி இல்லை; இடவசதியும் இல்லை" என்று வெட்கமில்லாமல் எழுதுகிறார் ஒரு அரசு அதிகாரி. 1990களில் கூட கோயிலுக்கு முன்பாக மனதைக் கொள்ளை... [மேலும்..»]

இலக்கியம்

மதியும் காந்திமதியும்

மதியும் காந்திமதியும்

காந்திமதியம்மன் பிள்ளைத்தமிழ் நெல்லை நகரில் கோவில் கொண்டிருக்கும் காந்திமதி அம்மையின் பேரில் அழகிய சொக்கநாதர் என்பவர் “காந்திமதி அம்மன் பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார்.சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் பாடப் பெற்றது. காப்புப் பருவம், கலைமகள் துதி அதிகாலையில் எழுந்து நதியில் நீராடி கோவிலுக்குச் சென்று கதவைத் திறந்து பூஜைக்குச் செல்லும் அர்ச்சகர்களைப் பார்க்கிறோம்.சூரியனை இப்படிப் பட்ட ஒரு அர்ச்சகராகப் பார்க்கிறார் புலவர். சூரியன் தினமும் கடலில் மூழ்கி ஒவ்வொரு நாளும் தனது ஆயிரம் பொற்கரங்களால் வெள்ளிக்கோவிலின் கதவைத் திறக்கிறானாம். அது என்ன வெள்ளிக் கோவில்? கமலாலயம். வெள்ளைத்தாமரையாகிய கோயில் தான்.வெள்ளிக் கோவிலில் வீற்றிருக்கும் கலைமகள் புலவரின் கண்களிலும்,... [மேலும்..»]