Posts Tagged ‘ பக்தி ’

நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?

ஒரு செடியைக் கற்பனை செய்துகொள். தான் வளர்வதற்கும், வலிமை பெறுவதற்கும், உயரமாக நிற்பதற்கும், அது சூரியனைச் சார்ந்து இருக்கின்றது. அது எவ்வளவு அதிகமாக சூரியனைச் சார்ந்து இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக வளர்கிறது. செடி வலிமையாக வளர்வதில் சூரியனுக்குத் தானாக எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், சூரியன் கொடுக்கும் ஒளியையும் சக்தியையும் வேண்டி, அந்தச் செடியானது சூரியனைத் தீவிரமாகச் சார்ந்து இருக்கும்போது, பெரிதும் வளர்ந்து மரமாகின்றது. ஒளியும், சக்தியும் கொடுக்கும் நற்பண்பின் மூலம் சூரியன் தன்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்வதில்லை... அது விளக்கெண்ணை என்று உனக்குத் தெரியாது. தேன் என்று நினைத்தாய். குடித்த பிறகு உன் எதிர்வினையானது, நீ அதை... [மேலும்..»]

நம்பிக்கை – 3: நான் யார்?

நீ பார்ப்பதாகச் சொல்லும் அனைத்துப் பொருட்களும், நீ நடைமுறப்படுத்துவதற்காகப் பயன்படுத்தும் உருவங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களே அன்றி வேறில்லை. அதற்கு மேல் அவற்றுக்கு மதிப்பில்லை . ஆம். நாம் என்ன செய்கிறோம் என்றால், அதையும் தாண்டிச் சென்று, அந்தப் பொருட்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். பொருட்களாக, நபர்களாக, உறவுகளாக, சொத்துக்களாக, நமது சொந்த உடலாக, நமது சாதனைகளாக, என்று எதுவாக இருந்தாலும், அவைகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், இல்லையா?... இருக்கலாம். ஆனால், அதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?.. மாமா, நாம் கடவுளைப் பற்றி விவாதிப்போம் என்று நினைத்தேன். நீங்கள் என்னை சிக்க... [மேலும்..»]

நம்பிக்கை – 2: யார் கடவுள்?

நீ சாப்பிடும் உணவின் சக்தியையும் பலத்தையும் உன்னுடைய இடது காலுக்கு மட்டும்தான் நீ அனுப்பவேண்டும் என்று நான் சொன்னால், உன்னால் அவ்வாறே செயல்படுத்த முடியுமா?.... இப்போது உன் நினைவிலிருந்து அந்தப் பாடலை அழித்துவிடேன் - அதெப்படி முடியும்? என்னால் முடியாது! - ஆகவே, உன் மனதும் உன் கட்டுப்பாட்டில் இல்லை. வேறு எதுதான் உன்னுள் உன் கட்டுப்பாட்டில் உள்ளது? என்னையோ அல்லது வேறு யாரையோ உன்னால் கட்டுப்படுத்த முடியுமா?... உன் உடலின் செயல்பாடுகளையும், மனத்தின் செயல்பாடுகளையும் உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும்போது, அவை வேறு ஒன்றால் கட்டுப்படுத்தப் படுகின்றன என்பதையும் நீ ஒத்துக்கொள்கிறாய்... ஆம், ஒரு... [மேலும்..»]

நம்பிக்கை – 1

"என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த என் மருமகன்கள் மற்றும் மருமகள்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக, எனக்கு மிகவும் ஈடுபாடுள்ள கருத்துப்பொருளான “கடவுள் நம்பிக்கை” பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு கிடைத்தது.முதல் ஆறு அத்தியாயங்கள் அவர்களுக்காக எழுதப்பட்டவைதான்... ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து என் மாமன்கள், அத்தைகள் போன்ற வயதில் மூத்தவர்களுக்கும் இது பிடித்துப்போக, அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதைப் படிக்க விரும்பி அவ்வாறே செயல்பட்டனர்" என்ற முன்னுரையுடன் இந்தத்தொடரை எழுதியிருக்கும் திரு.T.V.ஜெயராமன் ICWA படிப்பில் 1987-ல் இந்திய அளவில் மூன்றாவதாகத் தேர்வு பெற்று Chartered Accountant and a Cost Accountant தொழிலை மேற்கொண்டவர். மேலும் பல தளங்களில் நிபுணத்துவம் பெற்று,... [மேலும்..»]

மெய்யனான குலசேகராழ்வார்

ஒரு ஸ்ரீவைஷ்ணவன் மற்றொரு ஸ்ரீவைஷ்ணவன் காலில் விழ வேண்டும். விழும் போது நடுவில் பெருமாள் இருக்கிறார் என்று எண்ணம் வர வேண்டும். இப்படி அடியார்களுடன் பழகி அவர்களை வணங்கினால் தான் தான் பரமபதத்துக்கு சென்றால் சுலபமாக இருக்குமாம்.. திருவேங்கடத்தில் ஒரு ஏரியில் வாழும் நாரையாகப் பிறக்க கடவேன் என்கிறார். பிறகு அங்கே இருக்கும் சுனையில் மீனாகப் பிறக்க வேண்டும்; பொன்வட்டில் பிடிப்பவனாகப் பிறக்க வேண்டும் ; செண்பக மரமாக என்று அடுக்கிக்கொண்டு போகிறார் ஆழ்வார். ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் தள்ளியே இருக்கிறது. எல்லாவற்றிருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கவே செய்கிறது. ஆழ்வார் யோசித்தார். ’கண்ணா இரண்டு... [மேலும்..»]

காமம் – தமிழ்ப் பாசுரங்கள் – ஒரு புரிதல்

காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன.தமிழர் மரபுமட்டுமல்ல, மொத்த இந்தியக் குடியொழுகுமுறையே காமத்தைத் தவிர்க்கவில்லை. வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும், ரசனையிலும் மாறுகிறார்கள். இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது... பதின்ம வயதில் ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது? "அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி... [மேலும்..»]

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

January 9, 2018
By

ஆண்டாளின் பாசுரங்களை ‘பாலுணர்வு இலக்கியம்’ என்பதாக சித்தரிக்கும் ஒரு விடலைத்தனமான, முற்றிலும் தவறான கண்ணோட்டம் தொடர்ந்து சில அரைகுறைகளால் முன்வைக்கப் பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களில் பொதுத்தளத்தில் கூறப்பட்ட அத்தகைய திரிபுகளுக்கான மூன்று எதிர்வினைகள் இந்தத் தளத்திலேயே வந்துள்ளன. இப்போது அதே அபத்தக் கருத்துடன் இன்னும் சிலவற்றையும் சேர்த்து வைரமுத்து கூறுகிறார்... ஈவேராவைப் போற்றி எடுக்கப் பட்ட திரைப்படத்திற்கு “சீதையின் முதுகில் ராமன் தடவியதால் கோடுகள் இருக்குமா” என்ற ரீதியில் விரசமான பாடலை எழுதிய அந்த நபரைக் கூப்பிட்டு அழைத்து ஆண்டாளைக் குறித்துப் பேச அவருக்கு மேடை அமைத்துக் கொடுத்தவர்களுக்குப் புத்தி எங்கே போயிற்று?...... [மேலும்..»]

காசி[நன்னகர்]க் கலம்பகம்

முக்தி தரும் முத்தலங்களுள் ஒன்றான காசித்தலத்தின் மகிமையைக் காசிக் கலம்பகம் என்ற பிரபந்தத்தின் மூலம் தெரிவிக்கிறார் குமரகுருபரர். பல வகை மலர்கள் கலந்த மாலை கதம்பம் எனப்படுவது போல பலவகையான பொருட்களும் அகம் சார்ந்த பாடல்களும், பல வகையான செய்யுட்களும் இக்கலம்பகத்தில் விரவியிருக் கின்றன... குருகே! இவள் குருகை விடுத்தாள் என்று ஐயனிடம் சொல். குருகு என்றால் வளை என்றும் பொருள். இவள் வளையல்கள் அணிவதை விட்டுவிட்டாள். காதல் மேலீட்டால் இவள் அணிகளைத் துறந்தாள். இதேபோல சுகத்தை விடுத்தாள் என்றும் சொல் (சுகம் என்றால் கிளி என்றும் பொருள்). பால் பருகும் அன்னமே! நீ சென்று... [மேலும்..»]

என்னதான் செய்தது பக்தி இயக்கம்?

பகுத்தறிவற்ற சடங்குகள் கொண்ட வேள்வி அடிப்படையிலான வைதீக மதத்தில் ஒழுக்க நெறிகளுக்கு இடமில்லை. சமணமும் பௌத்தமும் கொல்லாமையையும் சமத்துவத்தையும் பகுத்தறிவையும் போதித்தன. அவையே ஒழுக்க நெறிகளை வளர்த்தன. தமிழ்நாட்டில் எழுத்தறிவை வளர்த்தன. ஆனால் பக்தி இயக்கம் என்ன செய்தது? பௌத்தத்தையும் சமணத்தையும் அழித்தது. வைதீகத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதனால் சாதியம் எழுந்தது. இன்று எந்த இடதுசாரியும் திராவிடவாதியும் தன்னை அறிவுஜீவியாகக் காட்டிக் கொள்ள தமிழ்நாட்டில் தரக்கூடிய சித்திரம் இதுதான். ஆனால் உண்மையில் வரலாறு சொல்வது என்ன?.... பக்தி இயக்கம் உருவாக்கிய அனைத்திலும், கோவில் சிற்பங்களோ, இலக்கியங்களோ அன்றாட வாழ்க்கை வாழும் சாதாரண எளிய... [மேலும்..»]

[பாகம் 24] அழுதால் அடையலாம்: சித்பவானந்தர்

December 21, 2012
By

ருத்ரன் என்பதன் பொருள் “அழச்செய்பவன்” என்பதாகும். உயிர்களை அழச் செய்வதன் மூலம் அவைகளைப் பண்பாடுறச் செய்வது ருத்ரனின் ஒப்பற்ற செயலாகிறது. உலகத்தவர் அழுகின்ற அழுகையின் உட்பொருளை ஆராய்ந்து பார்த்தால் அது துன்பத்தினை தவிர்த்து இன்பத்தினை நாடுவதாகவே இருப்பதைக் காணலாம்.... அழிந்து போகும் உலகப் பொருட்களை நாடி ஓடும் மனிதன் ஒருக்காலும் நிலைத்த இன்பத்தினைப் பெறமாட்டான். அதற்கு மாறாக அவன் மேலும் மேலும் துன்பத்தில் அகப்பட்டுப் பிறவிப் பெருங்கடலினூடே தத்தளிக்க வேண்டியதுதான்... யானே பொய், என் நெஞ்சும் பொய், என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey