Posts Tagged ‘ பங்குகள் ’

அடிப்படை மாற்றத்திற்கான 2018 பட்ஜெட், அபத்த விமர்சனங்கள்

மூங்கில் மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தது உடனே நம் ஊர் அறிவாளிகள் நக்கல் அடித்து மீம்ஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கோமாளி கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் குறுகிய காலத்தில் ஒரு 40000 கோடியையும் நீண்ட கால நோக்கில் ஒரு லட்சம் கோடிக்கு மேலும் சம்பாதித்து கொடுக்க கூடியது இந்த மூங்கில் துறை. தமிழ்நாடு முதல் திரிபுரா வரை கோடிக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வாழ்வுரிமையையும் ஏற்படுத்த வல்லது என்பதை இந்த முட்டாள்கள் சிந்திக்கவில்லை. இந்த அறிவிப்பை வடகிழக்கு மாநிலங்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றன...... [மேலும்..»]

கருணாநிதியும் பொய் மூட்டைகளும்

திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடல். லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும் [மேலும்..»]