Posts Tagged ‘ பஞ்சவடி ’

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 14

..அரசன் ஒருவனுக்கு எதை வேண்டுமானாலும் அழிக்கவும், மாற்றவும் சர்வ உரிமை இருக்கிறது. அப்படி இருந்தும் அவன் தவறு செய்தவர்களை மட்டும்தான் தண்டிக்கவேண்டும்; அதுவும் தவறுக்கு ஏற்றபடி கூடுதலோ குறைவோ இல்லாது தண்டனை அமையவேண்டும். அவனிடம் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதற்காக அவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பது நியாயம் அல்ல. அரசன் மட்டுமல்ல, இந்த நீதி சமூகத்தில் எந்த விதமான உரிமைகளும் இல்லாதவர்களுக்கும் உள்ளதுதான். பிராமணர்கள் தினப்படி செய்யவேண்டிய சந்தியா வந்தனத்திலும், "சூர்யஸ்ச மாமன்யுஸ்ச மன்யுபதஸ்ச மன்யுக்ருதேப்யஹ பாபேப்யோ ரக்ஷந்தாம்" என்று கோபத்தினால் வரும் பாவச் செயல்களைச் செய்யாமல் தவிர்க்கக் கடவுளை வேண்டுவதாக வருகிறது. .. [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12

“ராமோ விக்ரவான் தர்ம” என்று இராமரைப் பற்றி ராவணனிடம் மாரீசன் சொல்வதைப் போன்ற ஒரு உண்மையான, மனப்பூர்வமான நற்சான்றிதழை ஒரு பகைவனிடமிருந்து பெறுவது மிகக் கடினம். ஆம், அவன் தன் அனுபவத்தின் மூலம் சொல்கிறான். மற்ற நல்லவர்கள் செய்யும் நற்காரியங்களினால் நமக்கு நன்மை கிடைப்பது போல, சில தீயவர்கள் செயலால் நமக்குத் தீமையும் வரலாம் என்பது எவரது வாழ்க்கையிலும் ஒரு அனுபவமே. அதேபோல நாம் செய்யும் செயல்களும் நல்லதோ, கெடுதலோ மற்றவரையும் பாதிக்கும். நீரில் உள்ள விஷப் பாம்புகளை பிடித்துக் கொல்ல முயலும்போது அவை நடுவில் சிக்கும் மீன்களும் இரையாகின்றன என்ற வால்மீகியின் உவமை மிகவும் பொருத்தமானதே. [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11

பரதன் எப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்டவன், அவன் தாயாயிருந்தும் கைகேயி எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறாள், சாதாரணமாக தாயைப்போல பிள்ளை என்பார்கள், ஆனால் பரதனோ வேறுமாதிரி இருக்கிறானே என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். கைகேயியைப் பற்றிக் குறைவாகப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த இராமர் அதை ரசிக்கவில்லை. உடனே அவர் கைகேயிப் பற்றித் தாறுமாறாகப் பேசாதே என்று லக்ஷ்மணனைக் கோபித்துக் கொண்டார். [மேலும்..»]