Posts Tagged ‘ பஞ்சாப் ’

சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது...இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை... [மேலும்..»]

இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

September 3, 2014
By
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா?

லோக்சபா தேர்தலுக்குப் பின் மூன்று மாதங்கள் கழிந்த நிலையில் வெளியாகியுள்ள 4 மாநிலங்களுக்கு உள்பட்ட 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள், மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எச்சரிக்கை மணியாக உள்ளன. இத்தேர்தல் முடிவுகளில் பாஜக பெரும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்றாலும், அக்கட்சி 3 மாதங்களுக்கு முன் பெற்ற மக்கள் செல்வாக்குடன் ஒப்பிடுகையில் சிறு ஏமாற்றம் ஏற்படவே செய்கிறது. சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10), பஞ்சாப் (2), ம.பி. (3), கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் ஆக. 25-ல் வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாகப்... [மேலும்..»]

வன்முறையே வரலாறாய்…- 24

June 9, 2014
By

1947 மார்ச் 6-ஆம் தேதி அம்ரித்சருக்கு அருகில் ஷரிஃபுரா பகுதியில் ஒரு ரயிலை நிறுத்தி அதில் பயணத்துக் கொண்டிருந்த இந்து மற்றும் சீக்கியர்களைக் கொன்றார்கள். கொல்லப்பட்ட இந்து/சீக்கியர்களின் பிணங்களுடன் அந்த ரயில் அமிர்த்சர் ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது. முஸ்லிம்களின் கொலை வெறியாட்டம் அமிர்த்சரிலும் தொடங்கியது. அமிர்த்சர் மருத்துவமனை பிணங்களால் நிரம்பி வழிந்தது... மார்ச் 7, 8 தேதிகளில் முஸ்லிம் லீக், பதினொன்று இந்து மற்றும் சீக்கியப் பிரதி நிதிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியே ஏற்படுத்துவது அந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். ஆனால் அந்தப் பேச்சு வார்த்தைகளில் பங்கெடுக்க வந்த பிரதி நிதிகளில்... [மேலும்..»]

[பாகம் -26] – பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் – அம்பேத்கர்

‘‘..... பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்..... காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’ [மேலும்..»]

ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

September 24, 2010
By

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey