அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

பெளத்தத்துக்கு மதம் மாறியபோது அம்பேத்கர் முன்மொழிந்திருந்த 22 வாக்குறுதிகள் ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கியவை போலவே இருக்கின்றன.. “இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்” என்றார். ஆனால் அவர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும். பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான்…

View More அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்

பாரதியாரின் சீடரும் அவரால் பூணூல் அணிவிக்கப் பட்டு காயத்ரி மந்திர உபதேசம் செய்யப் பட்டவருமான கனகலிங்கம் (இவர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்), பாரதியாரின் மரணத்துக்குப் பின்னர் கிறுத்துவராக மதம் மாறினார் என்று ஒரு ஆதாரமற்ற பொய் உலவி வருகிறது. உண்மை என்ன? ரா கனகலிங்கம் எழுதிய ‘என் குருநாதர் பாரதியார்’ புத்தகம் வெளிவந்தது 1947ல். பாரதி இறந்தது 1921ல். அதாவது பாரதி இறந்து 26 வருடங்கள் கழித்து ரா கனகலிங்கம் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் ஒரு இடத்திலும் ‘நான் ஒரு கிறித்தவனாக மாறிவிட்டேன்’ என்றோ அல்லது அப்படியொரு தகவலை ஊகிக்கும் வகையிலோ கனகலிங்கம் ஒரே ஒரு வரியும் எழுதவில்லை. எழுதியிருக்கிறார் என்றால் எடுத்துக்காட்டவும். மாறாக, தனக்கு உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்…

View More பாரதி சீடர் கனகலிங்கம்: திரிபும் உண்மையும்

தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….

View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

ஓசூரில்  ஜூன் 10, 2018 ஞாயிறு முற்பகல் மைத்ரி அமைதி மையம் ஏற்பாடு செய்து நடத்திய ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ கருத்தரங்கம் சிறப்புற நிகழ்ந்தது. சங்க இலக்கியத்தில் வேதப்பண்பாடு என்பது குறித்து ஜடாயுவும், நாங்கள் ஆதி இந்துக்கள் என்ற தலைப்பில் ம.வெங்கடேசனும் உரையாற்றினர்… அடுத்து, தனது உரைக்கு முன்பாக, முந்தைய பேச்சாளர்கள் கூறிய சில கருத்துக்களின் தொடர்ச்சியாக,  கிராம தெய்வங்களும் வேதப்பண்பாடும் என்பது  குறித்து ரங்கன்ஜி  பேசினார். இறுதியாக,  பாரதியாரும் வேதமும் என்ற தலைப்பில் ரங்கன்ஜி உரையாற்றினார்.  உரைகளுக்கு நடுவில் பார்வையாளர்களுடனான கேள்வி பதில்களும் சிறப்பாக இருந்தன. இந்த உரைகளின் முழு வீடியோ பதிவுகளையும் இங்கு காணலாம்…

View More ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்

பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்

20.1% பட்டியலின மக்கள் வாழும் தமிழ்நாட்டில் 1% கூட அந்த மக்களின் வாக்குகளை பெற முடியாத பட்டியலின கட்சிகள்வரை பாஜகவிற்கு பட்டியலின மக்கள் வடமாநில பட்டியலின மக்கள்போல் ஆதவு அளித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் பல்வேறு பொய் செய்திகளை பரப்பிவருகின்றனர். பட்டியலின மக்களின் விரோதி பாஜக என்று திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் முறியடிக்கும்விதமாக தமிழக பட்டியலின மக்கள் பாஜக பக்கம் இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிற மாநாடாகவும் லட்சம்பேர் சங்கமிக்கிற மாநாடாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. என் சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கு பெற அன்புடன் அழைக்கிறேன். உங்கள் உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்..

View More பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்