அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

பெளத்தத்துக்கு மதம் மாறியபோது அம்பேத்கர் முன்மொழிந்திருந்த 22 வாக்குறுதிகள் ஏதோ அவசர கோலத்தில் உருவாக்கியவை போலவே இருக்கின்றன.. “இந்து மதத்தை விடுத்து நான் பௌத்தத்தை ஏற்கிறேன்” என்றார். ஆனால் அவர் வகுத்த அரசியல் சாசனப்படி பெளத்தர்களுமே கூட இந்துவாகவேதான் வாழ்கிறார்கள். வாழ முடியும். பெளத்தத்துக்கான மத மாற்றம் என்பது அம்பேத்கர் செய்தபோதே அவசியமற்ற ஒரு செயல்தான். அன்றைக்கே அதன் தாக்கம் ஒன்றுமில்லைதான்…

View More அம்பேத்கரின் தோற்றுப் போன ஆன்மிகமும், ஆதரவு பெறாத அரசியலும்

ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

டிரெய்லரில் வந்த காட்சிகளை வைத்து கிறிஸ்தவ மதமாற்ற அபாயம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறு ஏமாற்றம். ஆயினும், போதைப் பொருள் பரவல், பட்டியல் சமுதாயத்தினரின் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் (PCR) துஷ்பிரயோகம், “க்ரிப்டோ கிறிஸ்டியன்ஸ்” ஏன்று பெயர்சுட்டப்பட்டும் முகமூடி கிறிஸ்தவர்கள், தேசவிரோத “போராட்ட” என்ஜிஓ அரசியல் என நான்கு பரபரப்பான சமாசாரங்களைப் போட்டுக் காய்ச்சி காட்டமான காக்டெயிலாக இப்படி ஒரு அதிரடி திரைப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கும் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து திரைக்கலைஞர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்…

View More ருத்ர தாண்டவம் – திரைப்பார்வை

புதிய பொற்காலத்தை நோக்கி – 20

சலுகைகளுக்காக அரசாங்கச் சான்றிதழ்களில் இந்துவாக வேடம் அணிந்துகொண்டு மறைவாக கிறிஸ்தவ-முஸ்லீமாக இருப்பவர்கள் மிக அதிகம். எதற்காக இந்த இரட்டை வேடம். இன்றைய இந்து அரசு தரும் சலுகைகள் வேண்டும். அதே நேரம் இஸ்லாமிய கிறிஸ்தவ அடிப்படைவாத சக்திகள் பக்கமும் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடு அடிப்படையில் மிகவும் இழிவானது. அபாயகரமானது… சீர்திருத்தக் கருத்துகள் எல்லாம் நவீன காலத்துக்குத் தேவை என்றும் சரி என்றும் கருதுபவர்கள் நவீன கோவில்களைக் கட்டி அவற்றில் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. பழங்கால மரபில் மாற்றம் செய்ய விரும்புவதென்பது தேசியக் கொடியின் நிறத்தை மாற்ற முன்வருவதற்குச் சமம்…

View More புதிய பொற்காலத்தை நோக்கி – 20

தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

பதினைந்து ஆண்டுகளாக வழக்கறிஞர். சட்டத்துறையில் முனைவர். தில்லி சூழலில் பணியாற்றும் அனுபவத்தால் தேசிய அரசியல் மற்றும் தேசிய அளவிலான சிந்தனையும் பிரக்ஞையும் கொண்டவர். எந்தவிதமான அரசியல், அதிகார பின்னணியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது உழைப்பாலும் திறமையாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவர். இதுவரை எந்த சர்ச்சைகளிலும் வம்புகளிலும் சிக்காதவர். 43 வயதே ஆன இளம் தலைவர்… பாஜக, தகுதியும் திறனும் இருக்க கூடிய தலைவர்களை மைய அரசியல் அதிகாரத்தில் இருக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது என்று குற்றம் சொல்கிறார்கள். ஆமாம் திராவிட பார்வையில் குற்றமான பட்டியலின மக்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் வழங்கும் குற்றத்தை பாஜக மீண்டும் மீண்டும் செய்யும் என்கிறேன்….

View More தமிழ்நாடு பாஜக புதிய தலைர் எல்.முருகன்

இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?

எனக்குத்தெரிந்து விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்யாத தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்றும் ஊழல் மலிந்துவிட்டது என்றும் பிரச்சாரங்கள் நடைபெறவில்லை. எம்பிக்கள் கொள்ளையடித்துவிட்டார்கள் என்று எங்கேயும் பிரச்சாரம் நடைபெறவில்லை. பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்துவிட்டது என்று பேசுவதில்லை. அதாவது மக்களை நேரடியாக பாதிக்கிற பிரச்சினைகளைப் பற்றி யாரும் முக்கியப் பேசுபொருளாகப் பேசுவதில்லை. மதசார்பின்மைக்கு ஆபத்து வந்துவிட்டது. ஆகவே மதசார்பின்மையை காக்க மோடிக்கு வாக்களிக்க கூடாது. சிறுபான்மையினர் தாக்கப்படுகிறார்கள். பட்டியல் சமூதாயத்தினர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்று முக்கியப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்த தேர்தலில் மையப் பிரச்சாரம்… அண்ணல் அம்பேத்கர் தீர்க்கமான பார்வையுடையவர். இவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்தவர். அதனால் இவற்றைப்பற்றி இன்று பிரச்சாரம் மையம் கொண்டிருப்பதால் அண்ணல் அம்பேத்கர் இருந்திருந்தால் இன்று எந்தக் கட்சிக்கு வாக்களித்திருப்பார் என்பதை அலச வேண்டியுள்ளது…

View More இன்று அண்ணல் அம்பேத்கர் யாருக்கு வாக்களித்திருப்பார்?

கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04

இன்று கிழக்கு வங்காளத்தின் நிலை என்ன? ஐம்பது லட்சம் இந்துக்கள் இந்திய பிரிவினையின் பின் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்கள். [..] இந்து பெண்களை கடத்துவதும் கற்பழிப்பு செய்வதும் ஓரளவுக்கு குறைந்துவிட்டது என்பது சரியே. ஆனால் உண்மை என்வென்றால் 12 இல் 30 வயதுக்குட்பட்ட இந்து பெண்கள் இப்போது கிழக்கு வங்காளத்தில் இல்லாமல் போனது தான். [..]

View More கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-04