வேதகால பாரதம் – புத்தக அறிமுகம்

சுதந்தரம் கிடைத்த காலகட்டத்தில் பாளாசாஸ்த்ரி ஹரிதாஸ் மராத்தியில் எழுதிய புத்தகம். தமிழில் B.R.மகாதேவன் மொழிபெயர்ப்பில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஆசியுரையுடன் வெளிவருகிறது… எதிர்கால இந்தியா எந்த விழுமியங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படவேண்டும்? தொடர்ச்சியான தாக்குதல்களை மீறியும் அந்த ஆன்மா தன்னைத் தற்காத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் மீண்டெழுந்தது எப்படி? அந்த அடிப்படையில் வேத கால பாரதத்தின் தெளிவான அழுத்தமான சித்திரத்தை இந்தப் புத்தகம் மீட்டுருவாக்கித் தந்திருக்கிறது.. நம் முன்னோர்கள் வாழ்ந்த நம் கடந்த காலம் என்பது கை நழுவிப் போன பொற்காலம் மட்டுமல்ல;
அதுவே
நாம் சென்றடையவேண்டிய பொன்னுலகமும் கூட…

View More வேதகால பாரதம் – புத்தக அறிமுகம்

புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…

அடிப்படையில் இது ஒரு புராண மீட்டுருவாக்கக் கதை. இதை வைத்துக் கொண்டு ஒரு அழகான, கவித்துவமான, தத்துவமும் அங்கதமும் சுய விமர்சன நோக்கும் சுவாரஸ்யமும் இழையோடும் ஒரு இலக்கியத் தரமுள்ள ஒரு புதுமையான *நவீன* சிறுகதையை புதுமைப் பித்தன் எழுதியிருக்கிறார்… கட்டுடைப்பு” என்ற வகையில் கதையின் போக்கில் இரண்டு சிறிய மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறார்… எது அந்த பொற்பிரம்பு? இயற்கையா? விதியா? பிரபஞ்ச லீலையின் ஒரு சாயலா? அல்லது இவற்றை எல்லாம் கட்டி வைத்து விளையாடும் ஒரு இலக்கிய கர்த்தாவின் எழுதுகோலா? அவனது எழுத்தே தானா அந்தப் பொற்பிரம்பு? …

View More புதுமைப்பித்தனின் “அன்றிரவு” சிறுகதையை முன்வைத்து…

ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும், இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்க்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும்…. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும்…. “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள்… உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான்…

View More ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்

தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி

வாசிக்கும் போது மனதில் கசப்பும் அவமானமும் ஊறுகிறது. தமிழின் பெயரில் கூத்தடிக்கும் அரசியல் கோமாளிகள் ஒருபக்கம், அரசியல் வைராக்கியத்துடன் இந்திய வம்சாவளியினர் நலனைப் பாதுகாக்கும் முதுகெலும்பும் அக்கறையும் அற்ற மத்திய அரசு மறுபக்கம், நம்மக்கள் படும் துயரை புறக்கணிக்கும் ஊடகங்கள் மறுபக்கம், இவை எதிலும் அக்கறையில்லாமல் இலவசங்களுக்கும் ஆயிரங்களுக்கும் ஜனநாயகத்தையே அடகு வைக்கும் மந்தையாக நாம் மறுபக்கம். என்று மடியும் இந்த அடிமையின் மோகம்?… இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழர்கள் அயல்நாடுகளில் அனுபவிக்கும் அன்றாட வாழ்க்கை அவலங்களையும் காய்தல் உவத்தலின்றி முன்வைக்கும் முக்கியமான முயற்சி இது….

View More தமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி