Posts Tagged ‘ பண்பாடு ’

வலம் முதல் இதழ் வெளியிடப்பட்டது

வலம் முதல் இதழ் ‘வெங்கட் சாமிநாதன் சிறப்பிதழாக’ விஜயதசமி (அக்டோபர்-11) அன்று வெளியானது. முதல் இதழை திருமதி. சரோஜா (பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன்பிரசன்னா அவர்களின் தாயார்) பெற்றுக்கொண்டு வாழ்த்தினார். வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி - ஐப்பசி) இதழின் உள்ளடக்கம் - நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்; வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி - சொல்வனம் ரவிஷங்கர்; மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? - ராஜா ஷங்கர்; இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? - லக்ஷ்மணப் பெருமாள்; அருகி வரும் யானைகள் -... [மேலும்..»]

வலம்: புதிய மாத இதழ்

இந்த வருட விஜயதசமி (அக்-11) அன்று முதல் இதழ் வெளிவருகிறது. வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட எல்லாத் துறைகளைச் சேர்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளை வலம் இதழ் தாங்கி நிற்கும். சமரசமின்மை, நேர்மை, நுண்ணிய பார்வையுடன் செயல்படும் ஓர் இதழாக ‘வலம்’ விளங்கும். இதழின் பொறுப்பாசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் ஹரன் பிரசன்னா. 80 பக்கங்களுடன் கருப்பு -வெள்ளையில் மாதம் தோறும் ‘வலம்’ இதழ் வெளிவரும். இந்த இதழுக்குத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அன்போடும் பணிவோடும் கேட்டுக்கொள்கிறோம். ஆன்லைன், டிடி/செக் அல்லது வங்கிக்கணக்கு மூலம் இதழுக்கான சந்தாவை செலுத்தலாம்... [மேலும்..»]

மரபும் விமானப்பயணமும்

“நம்ம மரபு .. அது பழசு சார்”.. “மரபுன்னு எதைச் சொல்றீங்க?” என்றேன். தற்சமயம் மிகவும் வெறுக்கப்படும், தவறாக பயன்படுத்தப்படும் சொற்களில் இதுவும் ஒன்று. ”உதாரணமா நம்ம பழக்கங்கள். வீட்டுல பெரியவங்க வந்தா, எழுந்து நிக்கறது, வணக்கம் சொல்றது"...“பழக்கங்கள் மட்டுமே மரபு இல்லை. சரவணன். அது ஒரு வெளிப்பாடு. சமூகத்தின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் வழி வந்த விழுமியங்கள்தாம் நாம் தேடவேண்டியது. அவற்றைக் கைக்கொள்கிறோமா, அடுத்த சந்ததிகளுக்கு அனுப்பி வைக்கிறோமா? அதுதான் முக்கியம்”...குழும சிந்தனை என ஒன்று அமையும்போது, அதன் எல்லைகள் குழுமத்தால் வகுக்கப்பட்டு, தனி உறுப்பினர்களின் ஆழ்மனத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. தலைவர்கள் இல்லாது போயினும், குழும... [மேலும்..»]

பாஜகவும் இப்தார் விருந்தும்

இஸ்லாமிய சகோதரிகள் ராமருக்கு ஆரத்தி எடுத்தால் மெச்சுகிறோம். கிருஷ்ணாஷ்டமியில் நம் இஸ்லாமிய சகோதரிகள் அவர்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வடிவ அலங்காரம் செய்து அழைத்து வரும் போது அதை பாராட்டுகிறோம். அதையேநம் தலைவர்கள் சிறுபான்மையினருக்கு செய்தால் எதிர்க்கிறோம். நாம் என்ன வகாபிகளா? ஏன் இந்த இரட்டை டம்ளர் முறை? இந்த நாட்டை, இங்குள்ள பண்பாட்டை, கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி நாம் கடுமையாக எதிர்க்கிறோம். அதே வேளையில் ஏற்றுக்கொள்பவர்களை ஆதரிக்க வேண்டும். அரவணைக்க வேண்டும். அவர்கள் நம்மவர்கள். நம் சொந்தங்கள். நம் தொப்புள்கொடி உறவுகள். [மேலும்..»]

ஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்

இதை சொன்னவர் யார்? ஊகிக்க முடிகிறதா? “இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்....” [மேலும்..»]

எழுமின் விழிமின் – 18

தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்... சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்...சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன... [மேலும்..»]

ஆகம வழி நின்ற ஆலய யாகபூஜைகள் – சிறு விளக்கம்

இந்து சமய கிரியை வழிபாட்டு முறையிலே ‘யாகம்’ என்பது தொன்மையானது. இதனைத் தமிழில் வேள்வி என்று கூறுவார்கள். வேட்டல் என்ற சொல்லும் இதே பொருளுடையது. யாகம் என்ற சொல் யஜ் என்ற அடியை உடையது. யஜ் என்றால் வழிபாடு, ஆகவே பக்தி பூர்வமான சிறப்பான வழிபாடு யாகம் எனலாம். இதனையே யக்ஞம் என்ற சொல்லும் விளக்கி நிற்பதாகவும் காட்டுவர். யாகம் என்று சொல்லும் போது, எரியோம்பல் என்கிற அக்னி வழிபாடே முதன்மை பெறுகின்றது. அதற்கு அங்கமாக அந்த அக்னி குண்டத்திற்கு அருகிலும், சுற்றிலும், யாகமண்டபம் அமைத்து, கும்பங்களை ஸ்தாபித்து, பல்வேறு தேவ தேவியர்களை ஆவாஹனம் செய்து வழிபடும் வழக்கம்... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1

நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு... [மேலும்..»]

சரஸ்வதி: ஒரு நதியின் மரணம் – புத்தக வெளியீடு

சிந்துவெளி  நாகரீகத்தின்  உண்மை வரலாற்றைக் கூறும் நூல்.  மார்ச்-30 (வெள்ளி) மாலை 6 மணி,  சென்னை  ஆழ்வார்பேட்டையில்  நடக்கிறது.  நூலாசிரியர் மிஷேல் தனினோ,  பேரா. கே.வி.ராமன்,  முனைவர் நந்திதா  கிருஷ்ணா கலந்து கொள்கின்றனர்.  கிழக்கு பதிப்பகம் மற்றும்  சர் சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை  இணைந்து  இந்த வெளியீட்டு நிகழ்வை  நடத்துகின்றர். நூல்  குறித்து  அரவிந்தன்  நீலகண்டன் எழுதிய புத்தக  விமர்சனம்: மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி.. அனைவரும்  வருக. அனுமதி  இலவசம்.  அழைப்பிதழ் கீழே. [மேலும்..»]

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது. [மேலும்..»]