Posts Tagged ‘ பண்பாட்டு ஒற்றுமை ’

காலம்தோறும் நரசிங்கம் – புத்தக அறிமுகம்

கடந்த சில வருடங்களாக ஜடாயு எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்து ஞானத்திலும் இந்திய சிந்தனை மரபிலும் மையம் கொண்டு சமூகம், வரலாறு, கலை, கலாசாரம் எனப் பலதளங்களில் விரியும் கட்டுரைகள் இதில் உள்ளன. ராமாயணத்தின் பரிமாணங்கள், ஐயப்ப வழிபாட்டின் வேர்கள், சைவசமயம் குறித்த விவாதம், சிற்பக்கலைத் தேடல்கள், ஹிந்துத்துவம், மதமாற்றம், சாதியம், சூழலியல் குறித்த கண்ணோட்டங்கள் என்று வலைப்பின்னலாக இவற்றின் பேசுபொருள்கள் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு கொண்ட நமது பண்பாட்டின் கூறுகளையும், நிகழ்காலத்தின் சமூக, கலாசாரப் போக்குகளையும் இணைத்து சிந்திக்கும் பார்வையை இவை அளிக்கின்றன.... [மேலும்..»]

சாமி சரணம்

December 2, 2013
By

ஐயப்பன் மார்களில் ஏராளமான பேர் அயோத்தி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தோம். ஆயினும் வாவர் பள்ளியில் சென்று வணங்குவதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்கவில்லை... மணிகண்டன் காட்டு பகுதியில் மக்களுக்குப் பல கொடுமைகளை செய்து வந்த உதயணன் போன்ற கொள்ளைக் காரர்களை கடுத்தன், கருப்பன், வாவர், வில்லன் - மல்லன் ஆகிய படைத் தளபதிகளின் உதவியுடன் முறியடிக்கிறான். சபரிமலையில் யோகத்தில் அமர்கிறான். வரலாற்று நாயகனான இந்த வீர மணிகண்டன் சாஸ்தாவின் திரு அவதாரமாகவே மக்களால் கொண்டாடப் படுகிறான்... சரணம் ஐயப்பா என்று உள்ளம் உருக விளிக்கும் பக்தன், அங்கே சிவனும் சக்தியும் விஷ்ணுவும் புத்தனும்,... [மேலும்..»]

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் - “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்....க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் - ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம்.... [மேலும்..»]

போதிசத்வரின் இந்துத்துவம் – 1

பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது... அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்... ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்....... [மேலும்..»]