
தொல்காப்பியம் ஓரிடத்தில் பார்ப்பார், அரசர், ஏனோர் (வணிகர், வேளாளர்), அறிவர், தாபதர் (தவம் செய்வோர்), பொருநர் (போர் செய்வோர்) என்பவர்களை ஒரே சூத்திரத்தில் பட்டியலிட்டுப் பேசுகிறது. வெற்றிக்கு உரியதான வாகைத்திணையை விளக்கும் சூத்திரம் இது. முதற்பார்வையில் இந்தப்பட்டியல் தொடர்பற்றவற்றை ஒன்று சேர்த்து ஏதோ கலந்து கட்டியது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உரைகளின் துணைகொண்டு கற்கும் போது தமிழ் இலக்கண மரபின் ஆழமும் மேதமையும் புலனாகிறது... பதஞ்சலி யோக சூத்திரத்தின் மொழிபெயர்ப்புப் போலவே அமைந்துள்ள இவற்றைக் கொண்ட நூல் எதுவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டுப் பதஞ்சலி யோக மரபில் சூத்திரங்களாகவே அந்த நூல் பயிலப் பட்டிருக்க வேண்டும். அந்த நூல்... [மேலும்..»]