Posts Tagged ‘ பயங்கரவாதம் ’

யாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்

யாஹுப் சரண்டர் ஆகவில்லை அவனை கைதுதான் செய்தோம் என்கிறார் ராமன். அவனும் அவன் குடும்பமும் முழுக்க முழுக்க அந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டது என்றும் சொல்கிறார்.... உண்மையில் ஒற்றர்களுக்கும் அவர்களுக்கு துப்பு கொடுக்கும் ஆட்க்களுக்கும் ஒரு விதமான பிணைப்பு விளக்க முடியாத மனரீதியான நட்பு ஏற்பட்டு விடுகிறது. அது ஒரு விதமான உளவியல் சிக்கலும் கூட.ஒற்றர்களினால் உத்தரவாதம் கொடுக்கப் பட்டு அழைத்து வரப் படும் அல்லது தகவல் பெறப்படும் குற்றவாளிகளை அந்த அரசாங்கங்கள் தண்டிப்பதும் கை விட்டு விடுவதும் புதிதல்ல. குற்றத்தின் தன்மையைப் பொறுத்து அவனுக்கு சலுகைகளை அளிப்பதா வேண்டாமா என்பதை அரசாங்கமே முடிவு செய்யும்... ... [மேலும்..»]

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு, உலகின் அறிவிக்கப்படாத காவல்காரனாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு சர்வதேச அரசியலில் முதன்மைப்படுத்திக்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக  கம்யூனிஸ நாடுகள் மேற்கொண்ட உலகளாவிய முயற்சி வெற்றி பெறவில்லை. தவிர, 1990களில் நிகழ்ந்த கம்யூனிஸத்தின் தோல்வி முதலாளித்துவத்தை அடைப்படையாகக் கொண்ட அமெரிக்காவின்... [மேலும்..»]

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகள் மட்டுமே அங்கத்தினராக இருந்தபோது பிரிக் (BRIC) மாநாடு என்றழைக்கப்பட்டது. இந்த நாடுகள் அனைத்துமே வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகள். 2011-இல் தென் ஆப்பிரிக்காவும் இதில் இணைந்தபோது ‘பிரிக்ஸ்... [மேலும்..»]

மீண்டும் : சங்கரன்கோவில் படுகொலை : கண்டன அறிக்கை

மதிப்பிற்குரிய திரு.ராம.கோபாலன், நிறுவன தலைவர் இந்து முன்னணி அறிக்கை: சங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது. கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய பயம் வரும். ஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21

   முந்தைய பகுதிகள் :    தொடர்ச்சி… சென்ற கட்டுரையில் பங்களா தேஷ் நாட்டிலிருந்து செயல்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமிய அமைபினர் தங்களது பயங்கரவாத செயல்பாடுகளுக்கு இளம் பெண்களை பயன்படுத்துவதுப் பற்றிய செய்தியை வெளியிட்டிருந்தோம்.  இந்தக் கட்டுரையிலும் அதன் தொடர்ச்சியாக சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி எவ்வாறு கிடைக்கிறது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் சில செய்திகளை காணலாம்.  இந்த கட்டுரையில் சிமி இயக்கம் உத்திர பிரதேசத்தில் துவங்கினாலும், இதன் செயல்பாடுகள் மற்றும் இவர்களின்  நெட் ஒர்க் சம்பந்தமான செய்திகளை இக் கட்டுரையில் காணலாம். பாரத நாட்டின் எல்லையை... [மேலும்..»]

இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01

இந்தியன் முஜாஹிதீன் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா ஷகீல் அகமது தனது டுவிட்டர் இணயதளத்தில் ஆட்சேபகரமான  கருத்துக்களை எழுதியுள்ளார்.  இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதாகவும், மறைமுகமாக பயங்கரவாத செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும், 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரமே இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்ற கருத்தே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  இவ்வாறு சிந்திப்பது மோசமான சிந்தனையாகும்.  உண்மையில் ஷகீல் அகமதுவின் கருத்து சரியானதுதானா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். தொடர்ச்சியாகவே காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள், பயங்கரவாத செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது மட்டுமில்லாமல், பயங்கரவாத... [மேலும்..»]

ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…

இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே… ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும் மக்களை ஒன்றுபடுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதர் ஆடிட்டர் ரமேஷ். அவர் சிந்திய ரத்தம் காயவில்லை. இன்னொரு இந்து உயிரை நாம் இழந்து விட்டோம். ஆடிட்டர் ரமேஷோ, அவருடைய படுகொலைக்கு நியாயமான விசாரணை வேண்டும், நீதி வேண்டும் என்று கேட்டு தீக்குளித்த அந்த தாய் ராஜ ராஜேஸ்வரியோ செய்த தவறு தான் என்ன? இந்து சமூகத்தில் பிறந்தது அவர்கள் குற்றமா? . மற்றவர்கள் போல அல்லாமல் நம் சமூகத்தின் இழிவை போக்கவும், மேன்மைப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட இன்ப, துன்பங்களை விலக்கி வைத்த்து குற்றமா? தங்கள் உழைப்பை... [மேலும்..»]

துப்பாக்கி – திரை விமர்சனம்

ஸ்லீப்பர் செல்களைப்பற்றி முதலில் தமிழில் பேச முனையும் திரைப்படம் என்ற அளவிலும் இது முக்கியத்துவம் பெறுகிறது. அது என்ன ஸ்லீப்பர் செல் என்றால் இது தீவிரவாதத்தின் நவீன முகம். முதலில் எல்லாம் தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்தும், ஆஃப்கானிஸ் தானிலிருந்தும், சீனா போன்ற தேசங்களில் இருந்து வந்து கொண்டிருந்தார்கள் . ஆனால் அவை செலவு அதிகம் பிடிக்கும். அதற்காக பயங்கரவாதிகள் கண்டுபிடித்த வழிமுறை தான் இந்த ஸ்லீப்பர் செல்கள். மேலும் ஸ்லீப்பர் செல்களை உபயோகித்து படுபாதக கொலைக்குற்றங்களை அரங்கேற்றுவதன் மூலம் குற்ற வாளிகளை நெருங்குவதும் மிகவும் கடினமான வேலையாக மாறுகிறது. Who is the king pin என்பதை கண்டறிவது... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 17

2001ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை பல்வேறு கால கட்டங்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களும், இது தொடர்பான காவல்துறையினரின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தால், மற்ற மாநிலங்களை காட்டிலும் டெல்லியில் அதிக அளவில் இவர்களின் செயல்பாடுகள் நடந்துள்ளன என்பது நன்கு தெரியும். கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நடந்த சம்பவங்களை முழுமையாக கூறுவதற்கு பதில் முக்கியமான சம்பவங்களை மட்டும் தொகுத்து கொடுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நோக்கமும், அரசு சிறுபான்மையினருக்கு காட்டப்படும் சலுகையின் காரணமாக பாரத தேசம் படும் வேதனைகளையும் இனம் கண்டுகொள்ள ஏதுவாக இருக்கும். பாரத தேசத்தில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இஸ்லாமிய பயங்கரவாத செயல்பாடுகளை... [மேலும்..»]

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன? [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey