ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

இந்த இரண்டரை நாட்களில் இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ்க் கவிதையின் பல வீச்சுக்களையும், பரிமாணங்களையும் வண்ணத் தீற்றல்களாக அனுபவிக்க முடிந்தது… விவாதம் சூடாகி, உரத்த குரல்கள், கூச்சல்கள் ஒருசில சமயங்கள் எழுந்த போதும்… சில இலக்கிய விவாதங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், இதுவும் ஒரு நல்ல திகில் அனுபவமாகவே இருந்தது… இந்தக் கருத்துக்களை ஏற்கனவே பலமுறை ஜெ.மோவே எழுதியுள்ளார் என்றாலும், இத்தகைய தொகுப்பு நோக்கில் நேரடியாக, வாய்மொழியாக அதனை விளக்கியது சிறப்பாக இருந்தது…

View More ஊட்டி இலக்கிய சந்திப்பு: ஒரு அனுபவம்

அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது… முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை… சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்…

View More அகமதாபாதில் ஒரு நாள்

பிரார்த்தனைகளின் சங்கமம்

அல்லி தடாகம், அழகான பூச்செடிகள், அருமையாகப் பராமரிக்கப்படும் புல்வெளி என்ற அந்தச் சூழ்நிலையை ரசித்த வண்ணம் வெளியே வரும் நம் கண்ணில் படுவது, உள்ளே வரும்போது பார்க்கத் தவறிய, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய பாறையும் அதில் நேர்த்தியாகப் பொருத்தப் பட்டிருக்கும் பட்டயமும்தான்.

View More பிரார்த்தனைகளின் சங்கமம்

ஒரு பயணம் சில கோயில்கள்

வழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்… சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்…

View More ஒரு பயணம் சில கோயில்கள்

அழைத்து அருள் தரும் தேவி

சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது…“கவலைப்படாதே! அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது… நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்…

View More அழைத்து அருள் தரும் தேவி

புனிதமான போர்க்களம்

“ கீதை எப்போது சொல்லப்பட்டது என்பது நமக்கு முக்கியமில்லை. அதில் என்ன சொல்லபட்டிருக்கிறது என்பது தான் முக்கியம்,” என்ற விவேகானந்தரின் அற்புதமான வாசகம் நினைவிற்கு வந்தது.

View More புனிதமான போர்க்களம்

காசியில் ஒரு நாள்

பரந்து விரிந்திருக்கும் அந்த கங்கைக் கடலின் சீறி வரும் புது வெள்ளத்தில் சீரான வேகத்தில் படகு சென்று நிற்கும் இடம் ஒரு மணல் திட்டு. ஒரு கரையில் ஸ்நான கட்டங்களும் மறுகரையில் பழைய பனாரஸ் நகருமிருக்கும் கங்கை நதியின் நடுவே, இது போல பல திட்டுக்கள். சொன்னது போலவே நதி சுத்தமாக ஓடுகிறது… ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே பாடியவரையும் தபேலா வாசித்த கலைஞரையும் பாராட்டக் கை நீட்டும் நாம், அவர்கள் முகத்தைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து போகிறோம்.

View More காசியில் ஒரு நாள்