
முனைவர் கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா உடனான தொடர்பு தமிழ்ஹிந்து இணையதளம் மூலமாகவே கிடைத்தது. எனது அனுபவங்களையும், பேராசிரியர் ஐயாவிடமிருந்து நான் கற்றவற்றின் பயன்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்… எனது நண்பர்கள் வட்டத்தில் பிள்ளைத்தமிழ் தொடர்பான செய்திகள் வேண்டுமெனில் என்னைத்தொடர்பு கொள்வது வழக்கம். இசை நிகழ்ச்சிகளில் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை யாருமே பாடுவதில்லை எனும் குறை எனக்கு இருந்து வந்தது…