Posts Tagged ‘ பராக் ஒபாமா ’

குரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா

October 4, 2013
By

இரண்டாவது முறையாக ஜெயித்து வந்த ஒபாமா மீது ரிபப்ள்கிக்கன் கட்சியின் அடிப்படைவாதிகள் பலருக்கும் கடுமையான வெறுப்பும் காழ்ப்பும் இருக்கிறது. அவர் கருப்பர் என்பதினால் பல நிறவெறி பிடித்த ரிபப்ளிககன் கட்சியினரின் கோபம் இன்னும் பலமாக இருக்கிறது. ஆரம்பம் முதலாகவே அவரை செயல் பட விடாமல் தடுப்பதில் குறியாக இருந்து வந்துள்ளனர். . ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றாமல் வாபஸ் பெறக் கோரியே ரிபப்ளிக் கட்சி உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் சொற்ப மெஜாரிட்டியைக் கொண்டு கிட்டத்தட்ட ஒபாமாவின் அரசை ப்ளாக் மெயில் செய்து வருகிறார்கள்..... எந்தவொரு செலவுக்குமான நிதி ஆதாரம் அளிக்கப் படாதபடியால் பட்ஜெட்டை இரு... [மேலும்..»]

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

November 5, 2012
By

முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்... ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது.... இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்....... [மேலும்..»]

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

November 4, 2012
By

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்....இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி... வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்.... [மேலும்..»]

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]

November 2, 2012
By

ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்... பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி... அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி... [மேலும்..»]

ஒரு தேசம், இரு உரைகள்

November 18, 2010
By

அருந்ததி ராய் ’இந்தியா’ என்று சொல்லும்போது தற்போது இந்தியாவில் ஆட்சி செய்யும் அரசையும் தேசத்தையும் வேறுபாடில்லாமல் குறிக்குமாறு வேண்டுமென்றே பயன்படுத்துகிறார். அரசின் ”குற்றங்களுக்காக” இந்திய தேசம் என்ற கருத்தாக்கமே உடைத்து நொறுக்கப் பட வேண்டும்... ’இந்த தேசம் பயங்கர ஏழை, பயங்கரமாகப் பரந்து விரிந்தது, இவ்வளவு பயங்கரமான வேறுபாடுகளை வைத்துக் கொண்டு இது எப்படி வெற்றியடைய முடியும் என்றெல்லாம் அவநம்பிக்கைவாதிகள் சொல்லியபோதும், மூழ்கடிக்கக் கூடிய இன்னல்களையும் தாங்கி, உலகத்திற்கு ஒரு உதாரணமாக...’ [மேலும்..»]

இனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 4

January 30, 2010
By

பங்களாதேஷிலிருந்து வந்துள்ள குடியேறிகள், தாலிபான்களின் அட்டகாசங்கள், நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளின் பெரும்பான்மை விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கட்டுபடுத்துவதும், இவர்களாலேயே தோன்றும் கடும்போக்கு வலதுசாரிகளின் வன்முறைகளைக் கட்டுபடுத்துவதும் இன்று நமக்குள்ள மிகப் பெரிய சவால். [மேலும்..»]

அமெரிக்காவில் ஓர் அக்கப்போர்

September 18, 2009
By

நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்-- “நாயை அடிப்பானேன் வம்பைச் சுமப்பானேன்" என்று அதையே சற்று மாற்றி இந்தச் சம்பவத்திற்குப் பொருத்தினோமானால், "நாயை அடிப்பானேன் பீரைக் குடிப்பானேன்" என்று பொருத்தி விடலாம்.. இந்தச் சம்பவம் நம் சிந்தனைகளைத் தூண்டட்டும். இந்தியா போன்று பல்வேறு கலாசாரங்கள் கலக்கும் தேசத்திற்கு, விட்டுக்கொடுத்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தரும் ஒரு பாடமாக அமையட்டும். [மேலும்..»]