புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1

இலக்கியமாக வாசகனின் உணர்ச்சியை வெற்றிகரமாகத் தட்டி எழுப்பும் இந்த நாவல் தலித்திய பிரசார ஆயுதமாகவும் திகழ்கிறது. நாவல் உருவாக்கும் வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது… பறையர் ‘பள்ளி’ ஆகியோர் அறுவடை செய்ய மறுத்துவிட்டனர். பிரிட்டிஷ் வரி வசூல் அவர்களின் வருமானத்தைப் பாதித்தது. தங்கள் கூலியான அறுவடைப் பங்கை அவர்கள் அதிகரித்துக் கேட்டனர். விவசாயக்கூலிகளின் இந்தக் கோரிக்கைக்கும் வேலை நிறுத்தத்துக்கும் நில உடைமையாளர்களின் ஆதரவு இருந்தது… சென்னையில் ‘கொடை பங்களிப்பு எதிர்ப்பு சட்டம்’ (Anti-Charitable Contribution Act) ஒன்றை கொண்டு வந்தார் ரிச்சர்ட் டெம்பிள். அரசு நிர்ணயித்த உணவு தானிய விலையை குறைக்கும் விதத்தில் பஞ்சநிவாரணச் செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சத்தினால் ஏற்படும் படுகொலைகள் குறித்துப் பேசுவதும் எழுதுவதும்கூட குற்றமாக கூறப்பட்டது….

View More புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1

பாரதி மரபும்,திரிபும் – 6

ஈனம் – இழிநிலை, குறைபாடு, கீழ்மை, தாழ்வு, புன்மை, கள்ளி, சரிவு, முயல். இது தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ள பொருள்.பல்வேறு அர்த்தங்களைத் தரக்கூடிய ஈனம் என்ற வார்த்தையை பாரதி எந்த அர்த்தத்தில் பறையர்களுக்குப் பொருத்தினார்? ‘ஈனப் பறையர்களேனும்’ என்ற வார்த்தை மோசமான விளித்தலுக்காகவே பாரதி பயன்படுத்தினாரா? பாரதியின் கருத்து என்ன? பறையர்களைப் பற்றிய பாரதியின் கருத்து மிகத்தெளிவாகவே இருக்கிறது…. பாரதி ‘ஈனம்’ என்ற சொல்ல இழிவுநிலை, கீழ்மை, தாழ்வு என்ற பொருளிலும் பயன்படுத்தி இருப்பதால்  ஏன் மோசமான விளித்தலுக்கு இந்த கவிதையில் பயன்படுத்தியிருக்ககூடாது என்ற கேள்வியும் எழலாம்.

View More பாரதி மரபும்,திரிபும் – 6

வேதம் புனிதமடைந்தது!

இந்து ஆன்மீக சாதகர் சிவானந்த சர்மா அவர்கள், கர்நாடகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க சிருங்கேரி மடத்தின் ஆசிரமத்தில் இணைந்துள்ளார்.. பறையர் சமூகத்தைச் சேர்ந்த சிவானந்த சர்மா அவர்கள், திரு. பி.ஆர்.குஞ்சன் மற்றும் திருமதி தங்கம்மா தம்பதியரின் இளைய மகன் ஆவார்…இறுக்கமான பழமைவாத நிலைப்பாட்டைத் துறந்து, உண்மையான இந்து நெறிகளின் அடிச்சுவட்டில்… இதனுடன் நின்று விடாமல், மேன்மேலும் இச்செயல்பாடு வளர வேண்டும்…

View More வேதம் புனிதமடைந்தது!

உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்

70 ஆண்டுகளாகத் தீராத பிரச்சினை அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாதிருந்ததாலும்,அரசு நடுநிலையோடு செயல்பட்டதாலும் இந்து ஆன்மீகப் பெரியோர்கள், அமைதியை விரும்பும் இளைஞர்களாலும் உத்தப்புரம் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது. கட்சிகளைக் கடந்து உறவுகளே வென்றது. அந்த முத்தாலம்மன் அருளாலும் இது நடந்தது.

View More உத்தப்புரம் சாதிப் பிரச்சினை தீர்வு – ஒரு நேரடி அனுபவம்