விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்

பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கும் விக்கிரகம் அன்று வணங்கப்படுவது. உண்மையில் பிரபஞ்ச மயமாக இருக்கும் விராட் விக்கிரகம்தான் வணங்கப்படுவதாம். அந்த விராட் விக்கிரகம் எதனால் ஆனது? சேதனர்கள் என்னும் ஜீவர்களின் முழுமையும் சேர்ந்து ஒரு பெரிய சரீரம் என்று கருதினால் அந்தச் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவாக நாராயணன் இருக்கிறார்… பூமிதான் பாதங்கள். த்யு லோகம் என்னும் விண் என்பதுதான் சிரம். ஆகாயம் என்பது நாபி. சூரியன் தான் கண்கள். வாயு மூக்குகள். திக்குகள்தாம் காதுகள். பிரஜாபதியைக் குறியாக உடைய அந்த விராட்டிற்கு மரணம் என்னும் மிருத்யுதான் அபானம். லோகபாலர்கள் அவருடைய கைகள். சந்திரன் மனம். யமன் புருவங்கள்…

View More விஷ்ணுவின் பிரபஞ்ச மயமான விக்ரகம்

சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?

இது கீதையின் அந்தக் குறிப்பிட்ட சுலோகத்தை (9.32) குறித்த முற்றிலும் தவறான திரிபுவாதமும் பொய்ப் பிரசாரமும் அன்றி வேறில்லை. பாவிகளென்னைப் பணிவாராயினும், மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார் என்பது மகாகவி பாரதியாரின் மொழியாக்கம்.. சூத்திரர்கள் சமூக அந்தஸ்தில் தாழ்ந்திருந்தார்கள் என்பதால் தான் *இருந்தும் கூட* என்று வருகிறது. சத்துவ குண சம்பன்னர்களான பிராமணர்களும், ராஜரிஷிகளாகவும் உள்ளவர்களைப் பற்றி என்ன சொல்வது என்பது அவர்கள் உயர்ச்சியைக் காட்டியது. அப்படி சொன்னதால் உடனே சூத்திரர்கள் பாவப்பிறபிகள் என்று ஆகிவிடாது. இதற்கு தர்க்க சாஸ்திரத்தில் நஹி நிந்தா நியாயம் என்று பெயர். உதாரணமாக, சந்திரனும் கூட இவ்வளவு ஒளிவீசுகிறது, அப்படியிருக்க சூரியன் எவ்வளவு ஒளிதரும்? என்றால் அது சந்திரனை நிந்திப்பதல்ல..

View More சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் என் அனுபவங்கள் [..]

View More ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]

தன்னுடைய பக்தர்களுக்குக் காட்சி தந்து அவர்களை மகிழ்விப்பதே அவதாரங்களின் முக்கிய நோக்கம் என்னும் செய்தியை நாம் பார்த்தோம். அப்படி என்ன அவன் பக்தர்களுக்கு அவனையே காண வேண்டும் என்ற துடிப்பு? இது பித்துப் பிடித்தவன் செயல் போன்றல்லவா உள்ளது? அவனைக் காண முடியவில்லை என்றால் பக்தர்கள் துயரப்படுவரா? ஏன், நாம் எல்லோரும் அவனைக் கண்டதே இல்லையே, நன்றாக மூன்று வேளை சாப்பிட்டுக் கொண்டு, கைநிறைய சம்பாதித்து, பிள்ளைக்குட்டிகளுடன் சந்தோஷமாகத் தானே இருக்கிறோம்? […]

View More அச்சுதனின் அவதாரப்பெருமை – 5 [நிறைவுப் பகுதி]