Posts Tagged ‘ பாகிஸ்தான் ’

நாதுராம் கோட்சே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருந்தாரா?

கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எல்லோருமே காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்று வாதாடியபோது, கோட்சே மட்டும்தான் கடைசிவரை உறுதியாக, தான் மட்டும்தான் தன்னிச்சையாக அரசியல் காரணங்களுக்காக காந்தியைக் கொன்றதாகவும், இதில் எந்தவித அமைப்போ அல்லது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கோ எந்த ரீதியிலும் சம்பந்தமில்லை என்றும், தான் நல்ல திட சிந்தனையில் காந்தியைக் கொல்ல வேண்டும் என்ற சரியான எண்ணத்துடன்தான் கொலை செய்ததாகவும் கூறினார். கோட்சேவுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டும் அதை எதிர்த்து மேல்முறையீடு... [மேலும்..»]

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் . அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார். [மேலும்..»]

பாகிஸ்தானின் மத அரசியல்

பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு... பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது. பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு... விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியே வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம்.... [மேலும்..»]

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

ஒன்றிவாழ இடம் தராத இஸ்லாம்

September 29, 2016
By

ஹிந்து வெறுப்பால் பாகிஸ்தான் என்ற கனவுலகை நோக்கிச் சென்ற முஸ்லிம்கள், கடைசியில் அடிமையானது அமெரிக்கா, சீனா, சவுதி அரேபியே போன்ற எதேச்சாதிகார சக்திகளுக்கு மட்டுமே. முன்னேற்றமும், குறைந்தபட்ச நிம்மதியான வாழ்க்கையும் கூட பாக். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களுக்கு அமையவில்லை என்பதே முகத்தில் அறையும் உண்மை. இந்நூற்றாண்டின் முதல் பதின்மத்தில் மட்டுமே குண்டு வெடிப்பு, தீவிரவாதத் தாக்குதலால் மடிந்த பாகிஸ்தானியரின் எண்ணிக்கை 35,000க்கும் மேல். செல்வம் கொழிக்கும் இஸ்லாமிய அரபு நாடுகள் சிரிய முஸ்லிம் அகதிகளுக்கு இடமில்லாமல் கை விரித்தது அண்மைய நிகழ்வு.. கலிமாவை ஏற்ற மாந்தரிடையே எந்த நிற - மொழி - இன - பிராந்திய... [மேலும்..»]

காஷ்மீர்: இதுவே சரியான பாதை

பாகிஸ்தானில் எப்போதெல்லாம் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீரில் ஊடுருவலைக் கட்டவிழ்த்துவிட்டு, உள்ளூர் மக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தில் ஈடுபடச் செய்வது அந்நாட்டு அரசியல்வாதிகளின் கடமையாக இருந்து வருகிறது. அதேபோல, இந்தியாவில், குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அமைதியான வாழ்க்கைக்கு மக்கள் தயாராகி வருவதைக் கண்டாலும் பிரிவினைவாதிகளுக்குப் பொறுக்காது. உடனே வன்முறை தூண்டிவிடப்படும். 2016-இல் இங்கு நிகழும் வன்முறைகளுக்கு இவ்விரு காரணங்களுமே பொருந்தும். [மேலும்..»]

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் -1

இந்தியாவின் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைக்கும் வழிகள் : போதை மருந்து கடத்தல், தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் பெறப்படும் நிதி, திருடுதல் மற்றும் கொள்ளையடித்தல், மிரட்டி பணம் பறித்தல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவது ஆகியனவாகும். இவ்வாறு கிடைக்கும் பணம் பெரும்பாலும் ஹவாலா பண பரிவர்த்தனை மூலமாகவே பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அனுப்பபடுகிறது. இந்த நிதியில் 75 சதவீதம் போதைப்பொருள்கள் கடத்துவதிலிருந்து தான் கிடைக்கிறது. இதில் பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஜியாவுல் ஹக் முதல் பெனாசிர் புட்டோ வரை ஆட்சியில் இருந்தவர்கள் இதில் தொடர்பு... [மேலும்..»]

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

எமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…

  தமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது.  ‘அடிக்கடி வெளிநாடு செல்லும் மோடியை எப்படியேனும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும்’ என்ற ஒரு கிறுக்குத்தனமான ஜோக் போதும் விகடனின் விஷமத்தை அறிய. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோதும் இப்படித்தான் அவரது பெயரைக் கெடுக்க ஊடகங்கள் பலவகைகளில் முயன்றன. அதன் எதிர்விளைவாகவே... [மேலும்..»]

மத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்

இப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது... மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது... முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்சுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா... [மேலும்..»]

இருவேறு ஆளுமைகள், ஒரேவிதமான நோபல் பரிசு விளக்கம்?

October 20, 2014
By

பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகளின் கண்ணோட்டமே நோபல் பரிசுக் குழுவின் விளக்கத்தில் தெரிகிறது.. இந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் மலாலா என்ற பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey