Posts Tagged ‘ பாம்பன் சுவாமிகள் ’

இருளும் வெளியும் – 1

நாம் சூரியவொளி உள்ள காலத்தைப் பகலென்றும், அஃதில்லாத காலத்தை இரவென்றும் கூறுகின்றோம். இப்பகலிரவு எனும் பொழுதுகளைப் பூனையின் கண்களும் அக்கண்களைப் போன்ற பிறகண்களும் ஒருபடித்தாகவே காண்கின்றன. இவ்வகைக்கண்கள் புறவொளியை வேண்டாமலேயே காண்கின்றன. இத்தகைய கண்களையுடையவை இருளென்பதையே அறியா. பின் பகலிரவென்பதை எவ்வாறறியுமெனில், ஞாயிற்றின் வெப்பத்தால் பகலையும், அஃதின்மையால் இரவையும் அறியும் எனலாம். [மேலும்..»]

சாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்: பகுதி 2

“சிவ” எனுஞ் சொல்லைச் சொல்லுகின்றவன் சாதியிற் சண்டாளனாக இருப்பினும் அவனைக் காணின், அவனோடு கலந்து பேசுக, அவனோடு உறைக, அவனோடு உண்ணுக .. அடிமைப் பெண்ணின் மகனாகிய கச்சீவது என்பவன் ஆரிய வேதம் செய்த இருடிகளில் ஒருவனாக இருத்தலினாலும், அகத்தியரின் பத்தினி உலோபாமுத்திரை முதலாய பல பெண்கள் இருக்கு வேதத்தின் சில பாகங்களைச் செய்திருப்பதனாலும் சூத்திரரும் பெண்களும் வேதம் ஓதலாம் எனும் நியாயம் ஏற்படுகின்றது” என்று கூறுகிறார் பாம்பன் சுவாமிகள். [மேலும்..»]

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர். மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் 'எத்தனை முறை சமையல் நடந்தது?' என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், 'காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை' என்றார்'... [மேலும்..»]