எழுமின் விழிமின் – 2

மலைகளையும், நதிகளையும் கடந்து, தூரம், காலம் ஆகியவற்றின் எல்லைகளை எல்லாம் தாண்டி, பாரதச் சிந்தனையாகிற இரத்தம் உலகிலுள்ள பிற நாடுகளின் உதிரக் குழாய்களில் ஓடிப் பாய்ந்துள்ளது… இந்த இனத்தவரின் துணிவு தம் யாக குண்டங்களின் ஒவ்வொரு கல்லையுமே துருவி ஆராயத் தூண்டியது. புனிதமான நூல்களின் ஒவ்வொரு சொல்லையும் அலசிப் பார்த்து, ஒட்டியும் இணைத்தும் பொடிப்பொடியாக்கியும் பார்க்க வைத்தது.. கொல்லர்கள் படைத்துத் தரும் ரம்பத்தைப் போல அவர்களது கற்பனைச் சக்தி இருந்தது. அந்த ரம்பத்தால் இரும்புப் பாளங்களையும் அறுக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் வட்டமாக அதனை வளைக்கவும் முடியும்…

View More எழுமின் விழிமின் – 2

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

ஹோலோகாஸ்ட் குறித்து மனதைக் கலங்க அடிக்கும் ஏராளமான சினிமாக்கள் இன்றும் வந்த வண்ணம் இருக்கின்றன. மாறாக வட இந்தியாவின் ஆயிரக்கணக்கான கலை நுட்பம் மிகுந்த கோவில்களை யார் அழித்தார்கள் என்பது குறித்தோ ஸ்ரீரங்கம் கோவிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் எத்தனை முறை அழிக்கப் பட்டன எப்படிக் கொள்ளையடிக்கப் பட்டன என்ற உண்மைகள் குறித்தோ, ஒரு நாலந்தா பல்கலைக் கழகம் யாரால் எப்படி தீக்கிரையாக்கப் பட்டது என்ற உண்மை குறித்தோ நம்மிடம் இன்று எத்தனை மியூசியங்கள், எத்தனை நாவல்கள், எத்தனை நூல்கள், எத்தனை சினிமாக்கள் உள்ளன?

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2

கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

தன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தன் மக்களின் பாதுகாப்புக்கு கெடுதலாக விளங்கும் எவரையும் அவர்கள் நடுங்கும் வண்ணம் ஒழிக்கும் மன உறுதி படைத்த தலைவர்களைப் பெற்ற புண்ணிய தேசம் இஸ்ரேல். தி ஹவுஸ் ஆன் கரிபால்டி ஸ்ட்ரீட் என்கிற இந்த இஸ்ரேலிய திரைப்படம் கூட நிஜமாகவே நடந்த அத்தகைய ஒரு தீர சாகசத்தின் கதைதான். 1979ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது.

View More கரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 1

ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்தக் கட்டுரை. வேதங்களில் ’திராவிட’ என்ற சொல் இல்லை! சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை!

View More ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள்

ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்த ஜீவநதியில் வந்து சேரும் உயர்வு தாழ்வு என்னும் கழிவுகளை இது பலவிதத்தில் கழித்துக்கொண்டே இருக்கிறது. ஜாதிகளின் உயர்வு தாழ்வுகள் பேதிக்கப்பட்டதாகவும் மற்றும் ஒருங்கிணைந்து ஒளிரும் ஹிந்து ஸமூஹத்தின் ஒரு முகமாகவும் பரிச்சயம் தெரிவிக்கும் இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மற்றும் பார்த்து ரசித்த தக்ஷிண பாரதத்திலிருந்து உத்தர பாரதம் வரைக்குமாய் என் அனுபவங்கள் [..]

View More ஸமத்வம் தழைக்கும் ஹிந்து ஸமூகக் கொண்டாட்டங்கள்

இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

அறியாமையின் காரணமாக நடந்த சமுதாய அடக்குமுறையினால் சிலர் தாழ்த்தப்பட்டிருந்த நிலை அந்நியர்களுக்கு சாதகமாகப் போய்விட்டது… எத்தனை நிகழ்வுகளில் ‘இந்துக்கள்’ என்று இந்த அந்நிய சக்திகளால் வர்ணிக்கப்படுபவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டும்… இவர்களில் யார் யார் எந்த நாட்டுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அந்த நாட்டுக்கு ‘டாட்டா’ காட்டி அனுப்பி வைப்போம்.

View More இந்துத் தீவிரவாதமா, சுயநலமிகளின் சந்தர்ப்பவாதமா?

அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

ஒன்றே பரம்பொருள் எனினும் பரம்பொருள் நாட்டங்களும் தேட்டங்களும் பல திறத்தின. திருவுருவங்களில் பரம்பொருள் ருசி கண்டவர்க்கும் காண முயல்வோர்க்கும் அநுகூலமான, அழகிய திருவடிவம் விநாயகப் பெருமானின் விசித்திர வடிவம். இத்திருவுருவம் ஏழு தேசங்களின் அஞ்சல் பூக்களில் எழிலுடன் இடம் பெற்றுள்ளது. பாரதம், நேபாளம், ஸ்ரீலங்கா, லாவோஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, செக் – என்பன அத்தேசங்கள்.

View More அஞ்சல் பூங்காவில் ஆனைமுகன்

ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்

இக்கால உலக எரியைத் தணிக்கும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கே உண்டு. சன்மார்க்கம் தண்மை வாய்ந்தது. அத்தன்மை பொழியும் இடம் எது? நாடு எது? … முறையீட்டை முறையிட்டேன். அழுகையை அழுதேன்; அன்புப்புரட்சியை அறைந்தேன். அப்புரட்சியை நாடோறும் நீங்கள் செய்யலாம். உண்மை அழுகைக்கு பலர் வேண்டுவதில்லை. ஒரு சிலர் போதும். அஃது உலகை உய்விக்கும்.

View More ஆலமும் அமுதமும்: திருவாரூர் கலியாண சுந்தரன்