ஓடிப் போனானா பாரதி? – 06

சரி. பாரதிதான் மிகத் தீவிரமாகவும், கடுமையாகவும் அரசாங்கத்தை விமரிசித்தான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முயன்றார்கள். இது உண்மையானால், ‘மிகவும் மிதமான போக்கை உடையவர்,’ என்று அறியப்பட்ட ஜீ. சுப்பிரமணிய ஐயர் கைதுசெய்யப்படுவானேன், ‘வெதுவெதுப்பான வாக்கியங்களை’ எழுதிவிட்டு, highly defamatory என்று சொல்லிக்கொள்ளும் ஹிந்துவின் ஆசிரியரான கஸ்தூரிரங்க ஐயங்காரும் கைதாகலாம் என்று அஞ்சப்படுவானேன்?

View More ஓடிப் போனானா பாரதி? – 06

ஓடிப் போனானா பாரதி? – 05

இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை எழுந்தவுடன், எம் பி திருமலாசாரியார் உடனே முரப்பாக்கம் சீனிவாசனை உரிமையாளர் மற்றும் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்து, தன்னையே அந்த இரண்டு பொறுப்புகளுக்கும் பதிவுசெய்துகொள்கிறார். அதாவது 1908ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள். இதற்குப் பத்து நாள் முன்னால் – ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியன்று – ஒரு விசித்திரமான பத்திரம் கையெழுத்தாகிறது. ‘இந்தியா’ பத்திரிகையின் உரிமையாளரும், ஆசிரியருமான மு. சீனிவாசன் அப்பத்திரிகையின் குமாஸ்தாவாக நியமிக்கப்படுகிறார். சி ஐ டி குறிப்பில் இதுவும் பதியப்பட்டிருக்கிறது.

View More ஓடிப் போனானா பாரதி? – 05

ஓடிப் போனானா பாரதி? – 03

‘இந்தியா பத்திரிகை சென்னையில் வெளி வர ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்கெல்லாம் பாரதியார் அதில் வந்து சேர்ந்தார்,’ என்று மண்டயம் ஸ்ரீனிவாசாசாரியார், ‘சித்திர பாரதி’க்கு எழுதிய முன்னுரையில் சொல்கிறார். சீனி. விசுவநாதனின் ஆய்வின்படி, இந்தியா பத்திரிகை தொடங்கப்பட்டு ஏறத்தாழ ஆறு மாத காலத்துக்குப் பின்னால் ‘பால பாரத’ பத்திரிகை ‘இந்தியா’ பத்திரிகையின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியா பத்திரிகையின் நிர்வாகிகளில் ஒருவர் சொல்கிறார், ‘பாரதியின் ஆங்கில எழுத்தை அவர் இந்தியாவில் எழுதத் தொடங்கும் முன்பிருந்தே அவர் ‘பாலபாரத’ பத்திரிகையில் எழுதி வந்ததன் மூலம் அறிவேன்,’ என்று!

View More ஓடிப் போனானா பாரதி? – 03

ஓடிப் போனானா பாரதி? – 02

பத்திரிகை உலகத்துக்கு அப்போதுதான் வந்திருக்கும் இளைஞனிடம் தலையங்கம் எழுதும் பொறுப்பைத் தூக்கி யாரும் ஒப்படைக்க மாட்டார்கள். இதைச் இங்கே சொல்வதற்குக் காரணம் உண்டு. அது பாரதியைப் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இன்னொன்று. தன்னைத் தலையங்கம் எழுத விடாத காரணத்தால்தான் பாரதி சுதேசமித்திரனிலிருந்து விலகி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார் என்று கவிஞர் வைரமுத்து ‘கவிராஜன் கதை’யில் எழுதியிருக்கிறார். அது கவிஞர் வைரமுத்து அவர்களின் சொந்தக் கருத்தோ, ஆய்வோ அன்று; அப்படி அவர் எழுதியதற்குக் காரணம் உண்டு…

View More ஓடிப் போனானா பாரதி? – 02

போகப் போகத் தெரியும்-17

‘சாதி ஒழிப்பு’ என்ற சிந்தனை ஈ.வே.ரா.வுக்கு ஏற்படாத காலத்திலேயே பாரதியார் சமபந்தியை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்…
இந்தச் சூழ்நிலையில் மாதம் ரூ. 4333-60 சம்பளம் பெற்றுவந்த சென்னை மாகாண நீதிக்கட்சி அமைச்சர்களைத் தமிழர்கள் வெறுத்தார்கள். இவர்களெல்லாம் விவசாயிகளின் கண்ணீரையும் கடனையும் பற்றி அறியாத உயரத்தில் வாழ்ந்தவர்கள்; வளைத்துப் போட்ட வயல்கள் போதாது என்று மாதம் ரூ.4333-60 அரசுச் சம்பளமாக பெற்றுக் கொண்டவர்கள்.

View More போகப் போகத் தெரியும்-17

ஓடிப் போனானா பாரதி? – 01

பாரதி வரலாறு பதியப்பட்டிருக்கும் விதத்தில் உள்ள குறைகளைக் காட்டுவதற்கே இந்த முயற்சி. ஒன்று ஒரேயடியான துதிபாடல். இல்லாவிட்டால், நேர்மையான அணுகுமுறை என்று காட்டிக் கொள்ளவாவது பாசாங்கான குறைகூறல். மிகச் சிறந்த முறையில் பதிவு செய்திருப்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஆதாரபூர்வமான மிகப்பல ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பதிவை அளிக்கிறேன்.

View More ஓடிப் போனானா பாரதி? – 01

போகப் போகத் தெரியும்-10

தாழ்த்தப்பட்டவர் உரிமைகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் போராடியதில் ஈ.வேராவுக்கு தலைமைப் பீடம் உண்டா?

1962 தேர்தலில் ஈ.வேரா காங்கிரசுக்கு ஆதரவாகவும் தி.மு.க. விற்கு எதிராகவும் செயல்பட்டார். அப்போது தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி அவர் பண்புக் குறைவாகப் பேசியதாக செய்தி வெளிவந்தது…

View More போகப் போகத் தெரியும்-10

பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2

பாரதி தேசியக்கல்வியை தமிழிலேயே கொண்டுவர வேண்டும் என்று கூறுகிறபோது அவரது உயிர் தமிழா? ஆரியமா?
ஆரம்ப விளம்பரங்கள் கூட தமிழிலேயே வெளியிட வேண்டும் என்று சொன்ன பாரதியின் உயிர் தமிழா? ஆரியமா?

View More பாரதிக்கு உயிர் தமிழா? ஆரியமா? – 2

நாற்குலம்

~ மகாகவி பாரதி மொழிபெயர்ப்பில் திலகர் வாக்கு
திலகர் சொன்னார்: ‘பழைய காலத்து நான்கு வர்ணப் பிரிவுக்கும் இப்போதுள்ள ஜாதி வேற்றுமைக்கும் பேதமிருக்கிறது. திருஷ்டாந்தமாக, இப்போது ஒரே பந்தியில் இருந்துண்ண விரும்பாதிருத்தல் சாதிப் பிரிவுக்கு லட்சணம் என்று பலர் நினைக்கிறார்கள். பழைய காலத்து விஷயம் இப்படியில்லை.

View More நாற்குலம்

‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம்.

View More ‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி