போகப் போகத் தெரியும் – 9

இனி வைக்கத்துக்கு வருவோம். வைக்கத்தில் (1924) ஒரு முயற்சி தொடங்கப்பட்டது. அதன் விளைவாக சகுனம் முதல் சனாதனம் வரை எல்லாம் ஆடிப் போய்விட்டது என்று வலுவான பிரசாரம் இங்கே நடக்கிறது. அது சரியல்ல என்று தெரிவிப்பதுவே இந்தத் தொடரின் நோக்கங்களில் ஒன்று. சரியல்ல என்றால் நியாயமானதல்ல என்று ஒருமுறையும் பொய்கலந்தது என்று ஒருமுறையும் சொல்லிக் கொள்ளவும்.

View More போகப் போகத் தெரியும் – 9

இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

தமிழ்க் கவிதையால் தேசபக்திக் கனலைக் கொழுந்துவிட்டெரியச் செய்த மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள் இது.

அரசியல், ஆன்மீகம், காவியம், தத்துவம், சமூகம், முற்போக்குச் சிந்தனை, நகைச்சுவை என்று அவன் தொடாததில்லை. தொட்டுத் துலங்காததில்லை.

ஆங்கிலம், வடமொழி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த ஞானத்தால் தமிழை வளப்படுத்தினான்.

View More இன்று மகாகவி பாரதி நினைவு தினம்!

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?

View More அக அழகும், முக அழகும் – 2

பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

[இந்த நூலை இங்கிருந்து PDF கோப்பாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்]
தமிழி்ல் செய்யப்பட்டுள்ள பகவத்கீதை மொழிபெயர்ப்புகளில் மஹாகவி பாரதியின் மொழிபெயர்ப்பு மிகப் பரவலாக அறியப்பட்டதும், ஐயத்துக்கு இடமில்லாமல் மிகச் சிறப்பானதுமாகும். இந்த மொழிபெயர்ப்புக்கு பாரதி எழுதிய முன்னுரை மட்டுமே தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். பாரதியின் இந்த மொழிபெயர்ப்பைப் படிக்கும் எவருக்கும், கிருஷ்ண-அர்ஜுன உரையாடல்களில் காணப்படும் நெருக்கமான பாவத்தையும், கேள்விகளைக் கேட்கும்போது அர்ஜுனன் எடுத்துக்கொள்ளும் அதிகப்படி உரிமையையும், சகஜ மனோபாவத்தையும் கவனிக்கும்போது, பகவத்கீதை ஒரு பிற்கால இடைச்செருகல் என்ற வாதத்தில் பொருளில்லாமல் போவது இயல்பாகவே விளங்கும்.

View More பகவத் கீதை – பாரதியார் மொழிபெயர்ப்பு

மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1

(பாடலும் விளக்கமும்.) ரஷ்யப் புரட்சியையும் ஃபிஜித் தீவில் தமிழர் படும் பாட்டையும் தனது சொற்களால் அமர கவிதைகளாக்கிய பாரதி பத்தாவது சீக்கிய குருவான குரு கோவிந்தசிங் ‘கால்ஸா’ என்ற தர்மம் காக்கும் வீரர் படையை அமைத்த அற்புத நிகழ்ச்சியையும் எழுதி வைத்திருக்கிறான். தர்மதேவதையின் தாகம் தீர்க்க ஐந்து வீரர்களை பலி கேட்ட குரு கோவிந்தசிங்கின் சோதனை, வரலாற்றின் ஓர் பிரமிக்க வைக்கும் நிகழ்வு…

View More மகாகவி பாரதியின் ‘குரு கோவிந்தசிங்’ – 1