பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….

View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”… காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன….

View More காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

ஜெயிக்கப் பிறந்தவர்!

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில் போட்டியாளர்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட தலைவியாகவும் காலம் அவரை புடம்போட்டது….

View More ஜெயிக்கப் பிறந்தவர்!

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும்.

View More மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அம்மாவுக்கு மீண்டும் அரியணையைத் தந்துவிட்டன. ஆளுங்கட்சி மீதான…

View More மீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்

தமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது?

இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகள் நான்கிற்கு 12 தொகுதிகள் இரு திராவிடக் கட்சிகளால் அளிக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்டுப்பாடும் இல்லாத மதவெறி மிகுந்த அடிப்படைவாத இஸ்லாமியக் கட்சிகள் வெல்வதென்பது, தமிழகத்தில் உள்ள முஸ்லிம் மக்களை மேலும் தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து, பொதுமக்களிடமிருந்து அந்நியப்படுத்திவிடும். எனவே இந்தக் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். இக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் வாக்காளர்கள், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது என்பதை விட, இவர்கள் வெல்லக் கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பது அவசியம். ஊதுகிற சங்கை ஊதிவிட்டோம். விழித்துக் கொள்வது மக்களின் பொறுப்பு….

View More தமிழக தேர்தலில் யார் ஜெயிக்கக் கூடாது?

தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…

இரு திராவிடக் கட்சிகளும் அந்திம திசையில் உள்ளன. கட்சித் தலைமையை மையம் கொண்ட இவ்விரு கட்சிகளுக்கும் நீண்ட எதிர்காலம் இல்லை. விரைவில் ஏற்படவுள்ள அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்று சக்தி வேண்டும். மாற்று அரசியலிலும் இங்கு மும்முனைப் போட்டி உள்ளது. ம.ந.கூ, பாமக, பாஜக அணிகளிடையே எதனை மாற்று அரசியலாக நீங்கள் கருதுகிறீர்கள்? உருப்படாத இடதுசாரிகளை சுமையாகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்த விஜயகாந்த் தலைமையிலான அணியா? வன்னியர்களின் வாக்கு வங்கியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு வாய்ச்சவடால் பேசும் பாமகவா? தமிழகத்தின் அரசியல் சூழலை முற்றிலும் மாற்றத் துடிக்கும் சித்தாந்த பலம் கொண்ட பாஜகவா?…

View More தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…

இரக்கமற்ற இளஞ்சிவப்பு

வாழ்நாள் முழுவதும் விவசாயிக்காக உழைத்துக் களைத்த மாடுகளே கசாப்புக்குக் கொண்டுசெல்லப்பட்டு, இறைச்சி ஏற்றுமதியின் புள்ளிவிவரத்தை கூட்டி இருக்கின்றன. இது ஒருவகையில் சுய அழிவே ஆகும். இந்தியாவின் பெருமிதமிக்க பாரம்பரிய மாட்டு ரகங்கள் தற்போது அருகி வருகின்றன. இளஞ்சிவப்புப் புரட்சி அதன் உச்சத்தை தொடும்போது, நாட்டில் அடுத்து வெட்டுவதற்கு கால்நடைகளே மீதம் இருக்காது. ஏனெனில் இறைச்சிக்காக மாடு வளர்ப்பது நமது நாட்டில் இன்னும் தொழில்ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை… நன்றியற்ற மனிதகளாகிய நாம் சூழ்நிலைக் கைதிகளாகி, அடிமாடுகளை கசாப்புக்கு அனுப்பும் வரை, ஜல்லிக்கட்டு நடத்த நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுவே நீதிபதிகள் மறைமுகமாகக் கூறியுள்ள கருத்து…

View More இரக்கமற்ற இளஞ்சிவப்பு

பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்

பி ஜே பியின் தோல்விக்கு தாத்ரியோ, எழுத்தாளர்கள் போராட்டங்களோ பத்திரிகைகளோ எந்த விதத்திலும் காரணம் இல்லை. இவை எதுவுமே நடந்திருக்கா விட்டாலும் கூட இதே முடிவுகள்தான் வந்திருக்கக் கூடும்… பீகார் வாக்களர்களுக்கு பொருளாதார அறிவு எல்லாம் பெரிதாகக் கிடையாது. அடிப்படையில் உணர்ச்சி வேகத்திலும் ஜாதி மத அடிப்படைகளிலும் ஓட்டுப் போடும் முட்டாள்கள் அவர்கள். அவர்களிடம் அச்சா தீன் என்று நீ எதைச் சொல்வாய் என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாது. வளர்ச்சி என்றால் எது என்ன என்பதை அவர்களால் சொல்லக் கூட முடியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வளர்ச்சி எல்லாம் அவர்கள் பையில் கிடைக்கும் பணம் மட்டுமே… ஆகவே உண்மையான வளர்ச்சித் திட்டங்களை சற்று குறைத்துக் கொண்டு பொது மக்களுக்கு வரிச் சலுகை மூலமாக லஞ்சம் அளித்து ஓட்டுக்களைக் கவர பி ஜே பி முயலலாம். சாலைகளும், துறைமுகங்களும், டிஜிட்டல் இண்டியாவும், ஸ்மார்ட் சிட்டிகளும் இல்லாமல் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை அவர்களுக்குத் தேவையெல்லாம் இலவசங்களும் வரிக் குறைப்புக்களும் மட்டுமே….

View More பீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்

போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி

  ‘ஆசை இருக்கிறது தாசில் செய்ய அதிர்ஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க’ என்ற…

View More போலி கோஷத்தின் பொல்லாத பின்னணி