Tag: பா.ஜ.க.

புதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி

1977இல் இந்திரா காந்தியின் ஆட்சி தோல்வி அடைந்து, பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்படி வந்த பின்னர் இந்திரா காந்தி அரசியல் ஆதாயத்துக்காக நியமித்த பல கவர்னர்கள் நீக்கப்பட்டார்கள். அந்த இடத்திற்கு ஜனதா கட்சி புதிய கவர்னர்களை நியமித்தது. அப்படி தமிழ் நாட்டுக்கு நியமிக்கப்பட்டவர் பிரபுதாஸ் பட்வாரி என்பார். இவர் ஒரு சர்வோதயத் தலைவர். மது அருந்துவதோ, மாமிசம் சாப்பிடுவதோ இவருக்குப் பழக்கம் இல்லை, அதோடு மட்டுமல்லாமல் இவர் கவர்னராக இருந்த காலத்தில் இவரது கவர்னர் மாளிகையில் விருந்தினராக வந்து தங்கும் தலைவர்களுக்கும் மேற்படி சங்கதிகள் பரிமாறப் படுவதில்லை….

விரிவடையும் இந்துத்துவம்

மானுடத்தின் மாற்று பாலினங்கள் குறித்த ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை பாஜக தலைவரான வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் வெளியிட ஒத்துக் கொண்டார். உடனடியாக இது ஊடகங்களில் ஆச்சரியமான அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஹிட்லரும் ஸ்டாலினும் மாற்றுப்பாலின மக்களை கொன்றொழித்த போது வாய்மூடி மௌனித்த மேற்கத்திய மத பீடங்கள் இன்று அவர்களின் உரிமைகளுக்காக மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சாரம் செய்ய களமிறங்கினார்கள். ஆத்ம அறுவடையே இறுதி இலக்கு என்பது சொல்லாமல் பெறப்படும். … இருக்கும் இந்துத்துவத்தைவிட்டு இல்லாத ’இடம்’ தேடும் நேர்மையான இத்தகைய சிறுபான்மை இடதுசாரிகள் பரிதாப ஜீவன்களும் கூட…. இது ஒரு முக்கியமான முன்னகர்வு என்பதில் ஐயமில்லை. மானுட பன்மையை அதன் அனைத்து தளங்களிலும் பேணும் இயக்கமாக சர்வதேச அளவில் இந்துத்துவம் விரிவடைகிறது.

இலக்கின்றித் தவிக்கும் தமிழக தே.ஜ.கூட்டணி

மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழகத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டாமல் போனது தமிழகத்தின் துரதிர்ஷ்டமே. ஆளும் கட்சியான அதிமுகவின் அசுரத்தனமான வெற்றியால் தமிழக தே.ஜ. கூட்டணி நிலைகுலைந்திருப்பது, கூட்டணித் தலைவர்களின் மௌனத்திலேயே புலப்படுகிறது. இந்தக் கூட்டணி இனிவரும் காலத்தில் நீடிக்குமா என்ற கேள்வியும் எழத் துவங்கிவிட்டது இந்தக் கேள்விக்கு விடை…

மோடி அரசின் ஆரம்பமே அசத்தல்!

நாட்டின் 15வது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடியின் ஆரம்பமே அசத்தலாக உள்ளது. தனது பதவியேற்பு விழாவிலேயே தெற்காசிய நாடுகளின் தலைவர்களை அழைத்து பிரமிப்பூட்டிய மோடியின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் ஊடகங்களால் பெரிதும் வியந்தோதப்படுகிறது. டி.என்.சேஷனால் தேர்தல் ஆணையத்திற்குக் கிடைத்த மரியாதை போல, இதுவரையிலும் இழந்துபோன பிரதமர் பதவியின் மதிப்பு மோடியால் மீட்கப்படும் காட்சி தெளிவாகவே தென்படுகிறது. பிரதமர்…

அஞ்சலி – கோபி நாத் முண்டே: பொதுஜனங்களின் தலைமகன்

பாஜக மேல்தட்டு வர்க்கத்தின் கட்சி என்ற அடையாளத்தை மாற்றி கீழ் தட்டு மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக பரிணமிக்க செய்தவர் கோபி நாத் முண்டே. எளிமையாக அணுகக்கூடியவராகவும், தேர்ந்த செயல்பாட்டாளராகவும் . தூய்மையான பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரராகவும் இருந்த இந்து ஆன்மா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலனாக , மராத்வாடா பகுதியின் பிரதிநிதியாக இந்து சமூகத்தின் தொண்டனாக துடித்து கொண்டிருந்த இதயம் அமைதியில் ஆழ்ந்து விட்டது…. மோடியின் மந்திரிகள் முக்கியமானவர்கள். அவர்களை இவ்வளவு அலட்சியமாக இழப்பது தவறு. மந்திரிகள் எளிமையாக இருப்பது அவசியம் தான் ஆனால் அவர்களின் உயிர் பாதுகாப்பு அதை விட முக்கியம். ஒவ்வொரு மந்திரியின் உயிருக்கும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆபத்து நேரிடலாம்…..

பாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு

பாரதப் பிரதமராக மோடியை ஏகோபித்த ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுத்துவிட்டது. இதுவரை காணாத வகையில் பாஜக மட்டுமே தனித்து 282 இடங்களில் வென்றதுடன், மொத்தத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களில் வென்றுள்ளது. அதேசமயம், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் மட்டும் பாஜகவால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இம்மாநிலங்களின் அரசியல் நிலவரம் குறித்து…

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும்…

மோடிக்கு வாக்களிப்பீர்! வளர்ச்சிக்கு வாக்களிப்பீர்!

நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் (BJP Parliamentary Party) இணைச் செயலாளர் திரு.வி.சண்முகநாதன் கோவையில் ஏப். 21 அன்று  வெளியிட்டுள்ள அறிக்கை: . தமிழகத்தில் வரும் ஏப். 24ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை காணாத வகையில் இந்தத் தேர்தல் நவீன பிரசார சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளது. 18 வயதுக்கு…

இந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1

மாவட்ட அளவில் டி ஆர் ஓ வாக கலெக்டராக இருந்த ஐ ஏ எஸ் அதிகாரியைத்தான் மாநில அளவில் செயலராக எடுக்கிறார்கள். மாநில அனுபவும் உள்ளவரைத்தான் இந்தியா அளவில் பெரிய பொறுப்புக்களுக்கு நியமிக்கிறார்கள். இதுதான் தனியார் நிறுவனம் ஆனாலும் சரி இந்திய பொதுத் துறைகள் ஆனாலும் சரி இந்திய அரசாங்கம் ஆனாலும் சரி ஏன் உலக அளவிலும் சரி இதுதான் நடைமுறை… எனவே மோடியினால் சிக்கலான இந்தியாவை நிர்வாகிக்க முடியாது அபத்தமான ஒரு வாதமே… மோடி அளவு கூட தகுதியும் நிர்வாக அனுபவமும் இல்லாத ராகுல். சோனியா, கரத், யெச்சூரி போன்றவர்களை ஆதரிக்கும் இதே அறிவாளிகள் அவர்களை விட தனது திறமையையும் நிர்வாகத் திறனையும் பல முறை நீரூபித்து பல விருதுகளைப் பெற்ற மோடியை மூர்க்கமாக நிராகரிக்கிறார்கள். ஏன்? என்ன காரணம்? அவர் ஆட்சிக்கு வந்து விட்டால் குஜராத் போலவே இந்தியாவும் முன்னேறி நகர ஆரம்பித்து விடும். அப்படி இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்ல ஆரம்பித்து விட்டால் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியாது, ஊழல்கள் செய்ய முடியாது, நாட்டை விற்க முடியாது, பிற அந்நிய மதங்களை வளர்க்க முடியாது. ஏழ்மையை வைத்துப் பிழைப்பு நடத்த முடியாது….

விஷவிதை தூவும் காங்கிரஸ்

தோல்விமுகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி, எதையாவது செய்து மீடேற வேண்டும் என்ற துடிப்பில் செய்வதறியாமல் பல தவறுகளைச் செய்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமிய வாக்குவங்கியை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக அக்கட்சி நடத்தும் நாடகங்கள் விபரீத எல்லைகளைத் தொட்டு வருகின்றன. நாடு முழுவதும் மோடி அலை ஏற்படுத்திவரும் தாக்கத்தால் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்ட்தை அதன் துணைத்தலைவர் ராகுலின் அபவாதப்…