Tag: பா.ஜ.க.

பாஜகவில் பிதாமகர்கள்

காலம் மாறி வருவதையும் துடிப்பும் ஆற்றலும் ஓரளவு குறைந்த வயதும் கூடிய தலைவர்களை இன்றைய பாரதம் எதிர் நோக்கிக் காத்திருக்கிறது. வாக்களர்களில் பெரும்பாலோனோர் இளைஞர்கள். எதிர்காலம் குறித்த கனவுகளையும் அதை நோக்கி நாட்டைக் கொண்டு செல்லக் கூடிய தலைவர்களையும் எதிர் நோக்கிக் காத்திருப்பவர்கள்…. இது நாள் வரை மதிப்பையும் மரியாதையையும் பிரமிப்பையும் ஈட்டிய அந்த முது பெரும் தலைவர்கள் எல்லோரும் சாதாரண திராவிடக் கட்சி அரசியல்வாதிகள் போல தேர்தலில் போட்டியிடப் பிடிவாதம் பிடிப்பதும் இந்த சீட்டுதான் வேண்டும் என்று சிறு பிள்ளை போல அடம் பிடிப்பதும் அவர்கள் மீது பெரும் மரியாதைக் குறைவையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன….

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

“பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர். இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது…. வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது….

யார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்?

5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார்.  பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று  பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி,  மேற்படி பொதுக்கூட்டத்தில்  “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது  போல், …

நாடு முழுவதிலும் மோடி புயல்

16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு…

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!

எண்ணியிருந்தது ஈடேறுகிறது! தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று தமிழ்ஹிந்து இணையதளம் கடந்த செப்டம்பர் மாதமே வலியுறுத்தியது. அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது. காண்க: தமிழகத்தில் மாற்று அணி அமையுமா?-1 பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம்…

மூன்றாவது அணி முரண்பாடுகளின் அணி

மூன்றாவது அணி என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம், ஆட்சிக்கு வரமுடியாது என்பது நன்கு தெரிந்தும், தேர்தல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே அரிதாரம் பூசிக் கொண்டு மேடையில் தோன்றும் பப்பூன்கள்… 80 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்திர பிரதேசத்தில் இரு துருவங்களாக உள்ள முலாயமும், மாயவதியும் இணைந்து செயல்படுவார்களா என்பது சந்தேகம். இருவருக்குமே பிரதமர் பதவியின் மீது ஆசை, இருவருமே குறிப்பிட்ட பிரிவு மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள்….தங்களுக்கு தொகுதி வேண்டுமானலும், எந்த தொகுதி என்று முடிவு செய்வதானாலும், ஜெயலலிதாவின் முடிவில் உள்ளது என்ற வாய் மூடி மௌனியாக காட்சியளிக்கும் இடதுசாரிகளின் நிலை கேவலமாகவே காட்சியளிக்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் முதல்வர் என பிரகடனப்படுத்தியுள்ள அ.தி.மு.கவை முழுமையாக நம்ம முடியுமா என்பது தெரியவில்லை….

ராகுல் காந்தியின் காமெடி பேட்டி

ராகுல் காந்தி கூறியிருப்பது போல் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்தவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவில்லை. ஆ.ராசா பதவியை ராஜினாமா செய்த வரலாறு ராகுல் காந்திக்கு தெரியவில்லை. பாராளுமன்றம் முடக்கப்பட்டதும், உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த பின்னர், நீதி மன்றம் தெரிவித்த கருத்தின் காரணமாகவும் பதவியை ராஜினாமா செய்தார் என்பது உலகறிந்த உண்மையாகும்…. ராகுல் காந்தி அவர்களே, தாங்கள் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு மோடி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று பேசியிருந்தீர்கள். தாங்கள் 1984-ல் டெல்லில் நடந்த கலவரத்திற்கு தாங்கள் பகிரங்க மன்னிப்பு கோருவீர்களா என்ற கேள்விக்கு பதில் வேடிக்கையாக அமைந்த்து…

1984 இனப்படுகொலை – 2002 கலவரங்கள்: ஒரு ஒப்பீடு

1984ல் தில்லியில் சீக்கியர்கள் படுகொலை செய்யப் பட்ட “கலவரங்களும்”,  2002ல் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் முற்றிலும் வேறானவை  என்று அண்மையில் டைம்ஸ்  நவ் தொலைக்காட்சிக்கு அளித்த  நேர்காணலில் காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.  இந்த  இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ், பாஜக அரசு நடந்து கொண்ட விதமும் முற்றிலும்…

சாயம் கலையும் அரவிந்த் கேஜ்ரிவால்

அண்மையில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தில்லியில் எதிர்பாராத வெற்றியை அறுவடை செய்ததன் மூலமாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், பலரும் எதிர்பார்ப்பதுபோல தான் ஒன்றும் தூய அவதாரம் அல்ல என்பதை குறுகிய காலத்தில் நிரூபித்துவிட்டார். தில்லித் தெருவில் போராளியாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டு இவர் நடத்திய நாடகங்களைப்…

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால்…