லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு…

View More லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இருக்கும் கட்சிகள் எதிலும் விருப்பமோ, ஆர்வமோ நம்பிக்கையோ இல்லாமல், தனது சொந்த செல்வாக்கினால் பின்பற்ற சிலர் கிடைத்து விட்டால் புதிய கட்சிகள் துவங்கப்படுகின்றன. இப்போதெல்லாம் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சாதி, மத, இன, மொழி அடிப்படையில் சிறு சிறு கட்சிகள் தோன்றி பெரிய கட்சிகளோடு தேர்தல் பேரம் பேசி அதில் கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு அத்தோடு ஒதுங்கிவிடும் கட்சிகளும் உண்டு…. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மற்ற நாடுகளில் எப்படித் தோன்றின, எப்படி வளர்ச்சியடைந்தன எனும் விஷயத்தையும் சற்று பார்க்கலாமல்லவா? கி.பி. 1600க்கு முன்பு வரை இப்போது இருப்பதைப் போன்ற அரசியல் அமைப்புகள், கட்சிகள் எல்லாம் இருக்கவில்லை. ஜனநாயகம் எனும் கருத்து கிரேக்கத்தில்தான் உதயமானது….

View More அரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்

இந்த இயக்கத்தின் உற்சாகம் நாடெங்கும் பா.ஜ.க தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் திட்டமிட்டதை விடப் பெரிதாக, தீயாகப் பற்றிக் கொண்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒற்றுமை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்…. ஒவ்வொரு கிராமத்தின் மண்ணும், அந்த மண்ணின் விவசாயிகளின் பயன்பாட்டில் இருந்த இரும்புத் துகள்களும் சேகரிக்கப் படும். அந்த மண் ஒற்றுமைச் சிலையின் பீடமாகும். அந்த இரும்புத் துகள்கள் உருகி, இறுகிப் பிணைந்து இந்தியாவின் இரும்பு மனிதரின் சிலை உருக்கொண்டு எழும்… இதுவரை மோதி மக்களிடம் உரையாடிக் கொண்டிருந்தார். இப்போது மக்கள் மோதியின் கோரிக்கையின் பேரில் தேச ஒற்றுமைக்காக ஓடப் போகிறார்கள். இது எத்தகைய எழுச்சியை உருவாக்கும் என்று உணர்கிறீர்களா?…

View More இந்தியாவை இணைக்கும் இரும்புத் துகள்கள்

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….

View More ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

குறையொன்றும் இல்லை

மோடியின் அயராத உழைப்பும் மக்கள் அவர்மேல் கொண்ட நம்பிக்கையின் அடையாளமும் இந்த வெற்றிகளின் மாபெரும் உந்து சக்திகள். மொத்தம் 589 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 406 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது தோராயமாக 70 சதமானம்… மதசார்பின்மை பிரச்சாரம் எங்கே போச்சு? வரிந்து கட்டிச் சொன்ன குஜராத் கலவரப் பொய்களெல்லாம் என்ன ஆச்சு? மக்கள் அதையெல்லாம் டாய்லெட் பேப்பர் மாதிரி ஆக்கிவிட்டார்கள்!… முதன்முறையாக வாக்களிக்கும் இளைஞர்களை சுலபமாக கவர்ந்த கேஜ்ரி தன் வெற்றிக்காக இன்னொரு காரியத்தைச் செய்திருக்கிறார். நாமும் டில்லி மக்களும் நாட்டு மக்களும் கூர்ந்து கவனிக்க வேண்டிய காரியம் அது. தேர்தலுக்கு முன்பாக பாங்ளாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனுக்கு எதிராக பத்வா விதித்த மௌலானா தக்வீரைச் சந்தித்தார். ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த கேஜ்ரி அத்தோடு நிற்கவில்லை. முஸ்லிம்களை திருப்தி செய்யவும் முனைந்திருக்கிறார்….

View More குறையொன்றும் இல்லை

வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை !

ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் மொத்த உருவமானகாங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய அரையிறுதிப் போட்டியில் மிக மோசமாகத் தோல்வியுற்றுள்ளது. ம.பி, சட்டீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ராஜஸ்தானை மீட்டுள்ளது. தில்லியில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதும், காங்கிரஸ் கட்சியை தோல்வியுறச் செய்வதில் பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளன… பாஜகவில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம், கட்சித் தொண்டர்களின் அணுகுமுறை மாற்றம் தான். இப்போதெல்லாம், பாஜக தொண்டர்களோ, தலைவர்களோ தங்கள் பழைய செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை. இது முந்தைய பாஜக அல்ல….

View More வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை !

கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!

தோல்வி நெருங்குவதை உனர்ந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, தனது விசுவாச அடிமைகளான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), தேர்தல் ஆணையம் ஆகியவற்றைக் கொண்டு சதுரங்கம் ஆட முயற்சிக்கிறது…. மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்; முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்; ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்; கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்; ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்: காமவெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்; சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்; அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்…. ருத்துக் கணிப்புகளையே எதிர்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி எவ்வாறு தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?….

View More கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப்…

View More மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

எல்லாவிதமான தடுப்பு முயற்சிகளும் வேலை செய்யாத கடைசி நிலையில் மோடியின் பிருமாண்டமான கூட்டத்தை நிறுத்தும் கடைசி முயற்சியாக இஸ்லாமிய பயங்கரவாதத்தின் துணையை நாடியிருக்கிறார் நிதிஷ். பீஹார் மாநில போலீஸ் இப்படி அலட்சியமாக இருந்திருக்க நியாயமில்லை. எந்தவிதமான குறைந்த பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அளிக்க பிடிவாதமாக மறுக்கச் சொல்லி உத்தரவு இருந்திருக்கிறது….. அன்று மோதியும் பிற பா ஜ க தலைவர்கள் அவர்களுக்கு மேலாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான மக்களும் காட்டிய பொறுப்புணர்வும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்தின் மீதும் அதன் மக்களின் மனப்பக்குவம் மீதும் மாபெரும் நம்பிக்கையை உருவாக்கி விட்டன… மக்கள் எந்தவிதமான வன்முறையும் கலவரமும் இல்லாமல் அமைதியாக எவருக்கும் இடையூறு விளைவிக்காமல் பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டும் என்று அக்கறையுடன் அவர் அன்று விடுத்த கோரிக்கை இந்தியாவுக்கு ஆண்டவன் அனுப்பி வைத்துள்ள ஒரு கொடை அவர் என்பது உறுதியானது. அவரையும் இந்தியா தவற விடுமானால் அதற்கு மன்னிப்பே இல்லாமல் போய் விடும். ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னும் வாராது போல வந்த மாமணியைத் தோற்பதற்கு இந்தியாவுக்கு நேரமும் வளமும் கிடையாது…

View More பாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று…

View More பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!