Posts Tagged ‘ பிபின் சந்திர பால் ’

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை

சுவாமி விவேகானந்தரின் அழைப்பை ஏற்று, அயர்லாந்திலிருந்து பாரதம் வந்து, இந்நாட்டின் தவப்புதல்வியாகவே வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதை. அவரது 150-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இந்த ஆண்டு  நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகத்தில் ரத யாத்திரை நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. கோவையில் ஜனவரி 22,2018 (இன்று) தொடங்கி, சென்னையில் பிப்ரவரி 22,2018 முடிவுபெறும் இந்த மாபெரும் ரத யாத்திரை,  30 நாட்களுக்கு 27 மாவட்டங்களின் வழியாக சுமார் 3,000 கி.மீ. தொலைவைக் கடந்து 2 லட்சம் மாணவிகளிடம் சகோதரி நிவேதிதை ஆற்றிய பணிகளைக் கொண்டுசேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரத யாத்திரையை ஒட்டி, சகோதரி நிவேதிதை குறித்த கட்டுரை இங்கு... [மேலும்..»]

ஓர் இதழியல் கனவு…

September 11, 2015
By
ஓர் இதழியல் கனவு…

. ஒரு பத்திரிகை செய்தியுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்தபோது, அவரது உடலை நல்லடக்கம் செவதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தார் கணேசன் என்ற தொழிலாளி. கபரிஸ்தானில் குழி தோண்டுவது தான் அவரது தொழில். ஊரெல்லாம் கலாமின் புகழ் பாடிக் கொண்டிருந்தபோது, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் தில்லி பதிப்பில், கலாமின் உடல் நல்லடக்கத்துக்காக குழி தோண்டிய தொழிலாளியின் நேர்காணல் முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. யாரும் அறியாத, அடையாளமற்ற ஒருவரின் நேர்காணல் முக்கியமான நாளிதழில் முதல் பக்கம் வந்தது குறித்து நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இதே போன்ற ஒரு நிகழ்வு அமெரிக்காவிலும்... [மேலும்..»]