Posts Tagged ‘ பிரபஞ்சம் ’

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்... தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு... நேர்கோடு என்றால்... [மேலும்..»]

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1

சைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இதனை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் - முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்; பிரதிபிம்ப நகர். இரண்டாவது சொப்பன நகர். அதாவது, சொப்பனத்தில் காணப்படும் நகர்... கனவனுபவம் அவனுடைய மனநிலையை ஆழமாகப் பாதித்துவிட்டது. இப்போது நினைவோடு நனவில் அரசனாக இருப்பது உண்மையா? கண்டகனவில் அனுபவித்த வேதனைகள் உண்மையா? நனவனுபவம், கனவனுபவம் இவ்விரண்டில் எது... [மேலும்..»]

புருஷ சூக்தம்

March 6, 2013
By

புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் - வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி... பிராமணன் முகமானான் - கைகள் அரசன் - தொடைகள் வைசியன் - பாதங்களில் சூத்திரன் தோன்றினான்... பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்... வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான... [மேலும்..»]

கடவுள் என்றால் என்ன? – 2

சுவாமி தயானந்த சரஸ்வதியின் விளக்கங்கள் - ஈஸ்வரன் பௌதீக ஒழுங்கு முறைகளிலும், உயிரியல் ஒழுங்கு முறைகளிலும் வியாபித்து இருக்கின்றார். எனவே உயிரியலைப் பற்றித் தெரிந்துகொள்வது ஈஸ்வரனை பற்றி தெரிந்து கொள்வதே ஆகும். அதனால் இதுவும் புனிதமானது... என்னடா ஒரு எலிக்கு வேலை செய்யும் மருந்து நமக்கு அந்த வேலையை செய்வதா ! நாம் எலியைவிட மட்டமா என்பது உண்மை அல்ல. முத்துக்களை தாங்கி பிடிக்க அதன் இடையே கோர்க்கப்பட்ட நூல் இழைபோல் பிராணன் என்பது எல்லா உயிரினிடத்தும் உள்ளே இருந்து உயிருடன் இருக்கும் வரையில் தாங்கிப்பிடிக்கிறது... தர்மம் என்பது மனிதனுடைய... [மேலும்..»]

கடவுள் என்றால் என்ன? – 1

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் - வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது... ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள... [மேலும்..»]

கரங்கள் [சிறுகதை]

"எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது" என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே"... அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது... நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்... [மேலும்..»]

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7

October 10, 2011
By

“வேதாந்த மார்க்கத்தில் பிரபஞ்சத்தைப் பொய்த் தோற்றம் என்றனர். ஆகையால் பாரதம் அறிவியல் துறையில் வளர்ச்சி அடையாமல் இருந்தது” என்று நமது தத்துவ மேதைகளின் மீது குற்றம் சுமத்துவார்கள் நான்முகக் கடவுளும் உருத்திர மூர்த்தியும் திருமாலின் அம்சங்கள் என்றும், முறையே அவ்விருவர் புரியும் சிருஷ்டி-சங்காரத் தொழில்கள் திருமாலின் தொழிலே என்பதும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் “கர்த்தர்” (படைப்பவன்) என்ற பெயரும் வரும் [மேலும்..»]

பாவ மன்னிப்பும் பாப விமோசனமும்

சாம்பல் குவியலில் தீ இருப்பது ஒருவனுக்குத் தெரியவில்லை. அதனுள் நடந்தான்; அது காலைச் சுட்டுவிட்டது. அந்த வலியை அவன் அனுபவித்தே ஆகவேண்டும். அந்த வலியை மன்னித்து விடுகிறேன் என்று யாரும் சொல்லமுடியாது ....கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை... [மேலும்..»]

மலரும் பிரபஞ்சம்

முயல்களை ஏன் வெள்ளைவாலோடு இறைவன் படைத்தார் தெரியுமா?... சிருஷ்டி-கர்த்தர் என்கிற கோட்பாட்டைத்தான் கேள்விக்குள்ளாக்கி, தெளிவாக மறுத்திருக்கிறார் ஸ்டீபன் ஹாவ்கிங்... இந்த உலகத்தை உருவாக்கிய இறைவன், கருணைமிக்க, சர்வசக்தி வாய்ந்த, சர்வ அறிவு பொருந்திய ஒருவர் என்பதாக நாம் கற்பனை செய்கிறோம்... பிரம்மமே இப்பிரபஞ்சமாக வடிவெடுத்தது என்றும் அது பல சுழல்களில் தொடரும் ஓர் உயிரியக்கம் என்றும் பாரத ஞான மரபுகள் ஆதித் தொடக்கத்திலிருந்தே கண்டறிந்து சொல்லி வருகின்றன... பற்பல பிரபஞ்சங்களை சஹஸ்ரநாமம் கூறுகிறது... கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில் அவை உருவாகின்றன ... [மேலும்..»]

நம்பக்கூடாத கடவுள்: புத்தக அறிமுகம்

January 11, 2011
By

கடவுளை நீங்கள் உணரத் தான் முடியும், அனுபவிக்கத் தான் முடியும். *நம்ப* முடியாது, நம்பவும் கூடாது... எரிச்சலும் பொறாமையும் கொண்ட தேவன்களின் பிள்ளைகளாக இருப்பதைக் காட்டிலும், சிம்பன்சிகளின் பரிமாணப் பங்காளிகளாகவும், கொரில்லாக்களின் தாயாதிகளாகவும் இருப்பது.. ஒரு மூன்று பக்கக் கட்டுரைக்குக் கூட அவர் அமைக்கும் பரந்துபட்ட களமும், தரும் உழைப்பும் சாதாரணமானவை அல்ல. இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருமே அதனை மனப்பூர்வமாக உணரமுடியும்... [மேலும்..»]