Posts Tagged ‘ பிராமணரல்லாதார் ’

திராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்

பா.ரஞ்சித்திடம் பெரியார் முகமூடியை போடு இல்லையென்றால் நீ ஜாதி வெறியன் என்ற லாவணியை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். இது மெல்ல விவாதமாவது தமிழகத்தின் தலையாய தேவை. இன்றும் பெரியாரியம் யாருக்கு ஒரு முகமூடி என்பதை அரசியல் எதார்த்தம் சொல்லும். பிற்படுத்தப்பட்ட எழுச்சியும், அதிகாரமும் பட்டியல் ஜாதிகளுக்கு உறுத்தக்கூடாது என்ற ஏற்பாடு மட்டுமே பிராமண வெறுப்பு பேசுகிற திராவிடத்தின் மைய நோக்கம்... நீதிக்கட்சி இந்து மதத்திற்கு விரோதமாக இல்லை, ஆனால் தி.க/திமுகவின் இந்து மத விரோத கருத்துகள் மிஷனரி, இஸ்லாமிய மதமாற்றும் அரசியலுக்கு பயன்பட்டன. பிற்படுத்தப்பட்ட அதிகார எழுச்சி, ஆபிரஹாமிய மதமாற்ற குழுக்கள் மட்டுமே இன்றும் பெரியார் என்கிற முகமூடியை... [மேலும்..»]

பாரதி: மரபும் திரிபும் – 7

"தன் தேவைகளுக்காக எட்டயபுரம் ராஜா, மகாராஜாக்கள் மீதான சீட்டுக் கவிகள் பாடியதாக" பாரதி மீது ஒரு அவதூறு... தனது 14வது வயதில் கல்வி கற்பதற்காக உதவி செய்யுமாறு எட்டயபுர ராஜாவுக்கு எழுதினார். அதிலுள்ள மிடுக்கு பிற்காலத்தில் எழுதுகிற சீட்டுக்கவியிலும் எதிரொலிக்கிறது - தன்னை நேரிலே வந்து பார்த்து பரிசு கொடுக்க வேண்டும் என்கிறார். இங்கே பாரதி மற்ற புலவர்களிடமிருந்து விலகியே நிற்கிறார்... தன் தேவைக்காக நிதி கேட்ட வ.உ.சிக்கு வக்காலத்து வாங்கி, காந்தி வ.உ.சியை ஏமாற்றிவிட்டார் என்று விமர்சித்த மதிமாறன், தன் தேவைக்காக நிதி கேட்ட பாரதியை மட்டும் விமர்சிக்கிறார் என்றால் அவரது உள்நோக்கம் என்ன?...... [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 4

தமிழ் நாட்டில் நடப்பது ஒரு மோசடி வேலை. அம்பேத்கர், புலே போன்றாரைப் பற்றி பெரியார் பேசத் தொடங்கியதால், திராவிடர் கழகத்தை தலித்துகள் நம்பினார்கள். ஆனால் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் உயர் சாதி ஹிந்துக்கள், கீழ வெண்மணியிலும், புளியங்குடியிலும் விழுப்புரத்திலும் தலித் மக்களைக் கொலை செய்யத் தொடங்கினர், அப்போது தான் தலித்துகள் இந்த மோசடியை உணர்ந்தனர் [மேலும்..»]

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 3

நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதப்பட்ட முதல் கதையே தாழ்த்தப்பட்ட சாதியினரின் விடுதலையைப் பற்றிய பிரசினையைத் தான் மையமாகக் கொண்டுள்ளது.. கழக எழுத்தாளர்களுக்கு பிராமணர்களைச் சாடுவது மாத்திரமே சாதி ஒழிப்பாகியது. சமூக நீதியாகியது. தலித்துகளைப் பற்றிய சிந்தனையே இல்லாததால்...80 வருட கால கட்டத்தில் ஏதும் இலக்கியம் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எழுத்து ஏதும் முற்போக்கு எழுத்தாளர்களிடமிருந்து வந்ததில்லை.. [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 05

வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக - குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக - நீதிக்கட்சி ஆட்சி இந்த சாதனையைக் கொண்டுவந்தது என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்...இந்த ஆணை...மக்கள் தொகையில் பெருவாரியான எண்ணிக்கையில் இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு இடம் கொடுத்ததானது தாழ்த்தப்பட்டவர்களின் உரிமையை குழிதோண்டிப் புதைத்ததாகத் தானே அர்த்தம்? இதுதான் சமூக நீதியா? [மேலும்..»]

நீதிக்கட்சியின் மறுபக்கம் – 04

ஆக இதிலிருந்து நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது நீதிக்கட்சியை ஆரம்பிக்கவும், ஆதரிக்கவும் சொந்தப் பிரச்சினைகளே காரணமாக இருந்தன. டி.எம்.நாயர் தேர்தலில் தோற்றுப் போனதாலும், தியாகராய செட்டியார் தம்மை மேடையில் உட்கார வைக்கவில்லை என்பதாலும் பிராமணர்கள் மேல் இவர்கள் வெறுப்புக்கொண்டனர். இந்த சொந்த பிரச்சினைகளால் எழுந்த வெறுப்பால்தான் பிராமணரல்லாத கட்சியை ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்களே தவிர, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey