Posts Tagged ‘ பிராமண துவேஷம் ’

அனுபவம், அரசியல், சூழலியல், விவாதம்

பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

பயங்கொள்ளிப் பார்ப்பானும் பசுவதையும்

சமீபத்தில், இதே இரகத்தை சேர்ந்த ஒருவரை, "ஹிந்துக் கடவுள்களை நிந்திப்பதைப்போல் இயேசுவை சொல்லிப் பாரும். உங்களைக் கூலிப்படையாக நடத்தும் வெள்ளைக்காரன் செவுளில் ஒன்று விடுவான்" என்று சவால் விட்டேன். எதிர்பார்த்தவிதமே கௌபீனத்தில் கக்கா போய்விட்டார்... பசுவதை இன்றி பால் அருந்த வழி இருக்கிறது. ஆனால், பசுவதை இன்றி மாட்டிறைச்சி அருந்த வழி இல்லை. இரண்டையும் ஒப்பிடுவது முட்டாள்தனம் மட்டுமில்லை. அயோக்கியத்தனமும் கூட. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டால் "போஷிக்க விவசாயியால் முடியாது. எனவே சந்தையில் அடிமாடாக விற்க வேண்டி வருகிறது" என்பதும் கள்ளவாதம். பிஷ்ணோய் மக்களால் போஷிக்க முடியுமெனில் மற்றவர்களாலும் முடியும். பேராசை கொண்டவனால் முடியாது... [மேலும்..»]

கோயில்கள், சமூகம், வரலாறு, விவாதம்

கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

கோயில்நுழைவுப் போராட்டமும் திராவிட இயக்கமும் – 1

‘தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை பகிரங்கமாகவும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தொண்டர்களைத் திரட்டியும் தமிழகத்தில் முதலில் நடத்தியவை நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும்தான்’ – என்று தொடர்ந்து திராவிட இயக்க எழுத்தாளர்கள் மட்டுமல்லாமல் சில தலித் எழுத்தாளர்கள் கூட எழுதி வருகிறார்கள். இதற்கு முன்னே கோயில் நுழைவு போராட்டம் தமிழகத்தில் நடந்திருக்கிறது என்பதை இந்த திராவிட இயக்க எழுத்தாளர்கள் நமக்குச் சொல்வதில்லை. வரலாற்றை மறைப்பதிலும், திரிப்பதிலும் இவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்காரர்களும்கூட வளரவில்லை.  தமிழ்நாட்டில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டம் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். தலித்துகளுக்காக கோயில் நுழைவு போராட்டத்தை முதன் முதலில் ஆரம்பித்தது திராவிட இயக்கம்தான்... [மேலும்..»]

அரசியல், சமூகம், விவாதம்

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-4

அடுத்த சர்ச்சைக்கு வருவோம். திரு.பாண்டே அவர்கள் பெரியார் தலித்துகளுக்காக வைக்கம் போராட்டத்தை தவிர வேறு என்ன போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? என்று கேட்டார். மேலும் அவரே தொடர்ந்து சொல்லும்போது பெரியார் கோரிக்கை வைத்தார், நிறைய எழுதினார், பேசினார் என்பது அல்லாமல் நேரடியான போராட்டங்கள் என்ன என்று கேட்கிறார். அதற்கு திரு.வீரமணி அவர்கள் நேரடியான பதிலை சொல்லவில்லை என்பதை பார்த்த அனைவருக்கும் தெரியும். பேட்டி முடிந்தவுடன் மறுநாள் திராவிடர் கழகம் சார்பாக ஒரு மறுப்பை அளித்தார்கள். அதில் பாண்டே கேட்ட இந்த கேள்விக்கான விடையாக அவர்கள் அளித்த பதில் : தாழ்த்தப்பட்டோருக்கான திராவிடர் இயக்கத்தின் போராட்டங்கள் எனும் பெருவரலாற்றின் ஒரு... [மேலும்..»]

அரசியல், சமூகம், விவாதம்

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-3

மூன்றாவது சர்ச்சைக்கு வருவோம். இது கீழவெண்மணியில் பெரியார் ஆற்றிய எதிர்வினையைப் பற்றிய கேள்வி. கீழவெண்மணியில் பெரியாரின் அறிக்கை உப்புசப்பு இல்லாதது என்று பாண்டே கூறுகிறார். கீழவெண்மணி படுகொலை கண்டித்து பெரியார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று வீரமணி சொல்கிறார். திரு.பாண்டே விடுதலையிலிருந்து பெரியார் விடுத்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகிறார். அதை மறுத்து திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட மறுப்பு இது : கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட விவசாயத் தோழர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டபொழுது சென்னை பொதுமருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார் வெகுண்டெழுந்து, இந்தக் கொடுமைகளையும், இதுபோன்ற அராஜகங்களையும் சட்ட விரோதங்களையும் அடக்கிட ஆட்சியாளர்களால் முடியவில்லை. இந்தியாவை ஆள இந்தியருக்குத்... [மேலும்..»]

அரசியல், சமூகம், விவாதம்

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2

தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!-2

இரண்டாவது சர்ச்சைக்கு வருவோம். பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பார்ப்பானை அடி, பாம்பை விட்டுவிடு என்ற சொல்லாடல் பற்றியது. திரு. பாண்டே கொடுத்த ஆதாரங்களைவிட அதிகளவு, வீரமணி எதிர்பார்த்த அளவு ஆதாரங்களை நாம் கொடுத்திருக்கிறோம். வீரமணி தன் பதவியை விட்டு விலகுவாரா? ஒருவேளை பதவியில் இருந்து விலகினாலும் விலகிவிடுவார். ஆனால் அந்தப் பதவியில் அவர் மகன் அன்பு வருவார் என்பதில் ஐயமில்லை... [மேலும்..»]

அரசியல், வரலாறு

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில் வந்தன தான். தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை... வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள்... [மேலும்..»]

இலக்கியம், புத்தகம்

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

வெட்டுப்புலி: திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கியப் பதிவு

தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல்... வாழ்வையும் சிந்தனையோட்டத்தையும் ஆசைகளையும் சொல்கிறது... வெள்ளைக்காரன் மாதிரி இவனுங்களும் (பாப்பானுங்களும்) காபி குடிக்க ஆரம்பிச்சுடானுங்க.. அவன் மேரி நாமும் ஆவணும்னா கறி மீனை விட்டுப்புட்டு தயிர் சோறு சாப்பிட்டுக்கினு நாக்கு செத்துப் போக வேண்டியதுதான். அடச்சீ, நாம எதுக்கு பாப்பானை மாரி ஆவணும்?... இந்தப் பாப்பானுவ நுழையறதுக்கு முன்னாலே நீ நுழைஞ்சிடு... அவன் வட்டாரத்தில் பாரதியாரை ஒதுக்கினார்கள். பாரதி தாசன் போதும் அவர்களுக்கு... எல்லாப் புத்தகங்களையும் போல, இதைப் பற்றியும் கூட தமிழ் உலகம் மௌனம் சாதிக்கலாம். [மேலும்..»]