Posts Tagged ‘ பிரிவினைவாதம் ’

அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை

காஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை

இந்தியா இன்றைக்கல்ல, என்றைக்குமே காஷ்மீரை விட்டுக் கொடுக்காது. கொடுக்கவும் முடியாது என்பது நிதர்சனம். அவ்வாறு விட்டுக் கொடுக்கும் நாளில் கணக்கற்ற நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து ஜனித்திருக்கும் பாரதவர்ஷம் மரணித்திருக்கும். மீளவே முடியாத படுகுழியில் இந்தியர்கள் வீழ்ந்திருப்பார்கள். ஹிந்துக்கள் இந்த மண்ணிலிருந்து மறைந்திருப்பார்கள்... தங்களின் மதத்தைச் சாராத காஃபிர்களின் மீது ஜிகாத் செய்து அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களின் பெண்களையும், சொத்துக்களையும் அபகரிப்பது அல்லாவின் கட்டளை என முழுமையாக நம்புகிற முஸ்லிம்கள் இருக்கும்வர இந்தியாவுக்கும், இந்திய ஹிந்துக்களுக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை... [மேலும்..»]

அரசியல், சினிமா

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 2

ரஜினி விஷயத்தில் அவர் இந்திய தேசிய நலனை முன்னெடுப்பார் என்று நம்ப எந்த முகாந்தரமும் இல்லை. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இந்து விரோதிகளின் கைப்பாவையாகிவிட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அதையே காட்டுகின்றன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழகத்தை காப்பாற்றுவதற்கு முன் ரஜினியைக் காப்பாற்றவேண்டும் என்றுதான் தோன்றுகிறது... மக்கள் இந்து மனநிலையுடனும் இந்திய தேசிய மனநிலையுடனும் வளர்ச்சி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் இருக்கிறார்கள். மக்களுடைய அந்த உணர்வுக்குக் குரல் கொடுக்க எந்த தமிழக கட்சியும் முன்வருவதில்லை. ரஜினிகாந்த் தனது பிரபல்யத்தைப் பயன்படுத்தி அந்தக் குரலை முன்னெடுக்கவேண்டும். வெற்றி தோல்வி பற்றி சிந்தித்து காய் நகர்த்த வேண்டிய விஷயம் அல்ல... [மேலும்..»]

சினிமா

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

பேட்ட திரைப்பட அரசியலும் ரஜினியும் – 1

ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன... தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை எளியவர்களின் காப்பாளர்.. இவையெல்லாம் கபாலிக்கு முன்... இந்து விரோதம் என்பது புதிய விஷயம் ஒன்றுமல்ல. பராசக்தி காலம் தொடங்கி நடந்துவரும் அசட்டு, அபாயகரமான விஷயம் தான். ஆனால், இப்போது இந்து விரோத படங்களின் பெருக்கமானது முந்தைய இரண்டு காலகட்டத்தைவிடக் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படவேண்டியது. ஏனென்றால், அது இதுவரை எப்போதும் இருந்திராத இந்திய விரோதம் என்ற விஷத்தையும் நுட்பமாக உள்ளே கொண்டிருக்கிறது... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை 'வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு" என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்... வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

காவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்

ஆறு வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்பதே தவறு. இது முழுக்க முழுக்க தமிழ் மீடியாக்களின் புரிதலில் ஏற்பட்ட கோளாறு அல்லது விஷமப்பிரச்சாரம். உச்சநீதிமன்றம் ஆறுவார காலத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்கச்சொன்னது. அவ்வளவுதான். இதை ஆரம்பம் முதலே மக்களிடமும் மீடியாக்களிடமும் தெளிவாக விளக்காதது தமிழக பாஜகவின் தவறு.. அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்கள் வசம் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை நதிநீர் ஆணையத்தின் வசம் ஒப்படைக்க ஒத்துக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட எந்த மாநிலமும் இதற்குத் தயாராக இல்லை. கர்நாடகம் , ஆந்திரம் , கேரளம் மட்டுமல்ல,... [மேலும்..»]

அரசியல்

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு: ஒரு பார்வை

ரஜினி காந்த் இந்திய தேசியவாதத்துக்கு இணக்கமானவராகவே இதுவரை இருந்துவந்துள்ளார். அவர் பி.ஜே.பி.யின் ஆசியுடன் களத்தில் குதித்திருக்கிறார் என்று நம்ப அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. தமிழ் தேசியப் பிரிவினைவாத சக்திகள் அவரைக் கட்டம் கட்டி எதிர்க்கத் தொடங்கியிருப்பதிலும் பாஜக அவருடைய வருகையை வரவேற்று அறிக்கைகள் விட்டிருப்பதிலும் இருந்து இந்த யூகமே உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகிறது. ஆனால், தமிழக, இந்திய அரசியலை தமிழக இந்திய சக்திகள் தீர்மானிக்கவில்லை என்று நம்ப நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றனவே... ரஜினியின் அரசியல் பிரவேசம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது அவரைப் பின்னின்று இயக்குபவர்கள் யார் என்பதைப் பொறுத்தே... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

உதயகுமார் விவகாரம்: சூதுசெய்யும் படித்தவர்கள் – 2

வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதி வாங்கிக் கொண்டு இந்தியாவைத் துண்டாடுகிறார்கள் என்று ஜெயமோகன் கடுமையான குற்றசாட்டுக்களை வைக்கும் அருந்ததி ராயும், எம்.டி.எம், அ.முத்துக்கிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் இந்த உதயகுமாரை விட எளிமையாக நடிப்பார்களே? ஏன் அவர்களைக் கொஞ்சிக் குலாவுவது கிடையாது? ஏன் இவருக்கு மட்டும் சிறப்பு சலுகை?... அணு உலை மீது குற்றம், சந்தேகம் இருந்தால் அந்தத் துறையின் விற்பன்னர்களிடம் அல்லவா முதலில் கேட்க வேண்டும்? அப்படி சந்தேகம் ஏற்படும் அளவுக்கு விக்ரம் சாராபாயும், அப்துல் கலாமும், டாக்டர் சிதம்பரமும், ராஜா ராமண்ணாவும் பொய்யர்களா அயோக்கியர்களா என்ன? இந்தியா வெற்றிகரமாக ராக்கெட்டுகளையும் சாட்டிலைட்டுகளையும் ஏவவில்லையா? அவர்கள்... [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

ரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது!

அரசியல் களத்தில் அவர் போராடட்டும். அவரை ஏற்பதோ, நிராகரிப்பதோ தமிழக மக்களின் உரிமை. அதைத் தடுக்க பாரதிராஜா, சீமான் வகையறாக்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. இப்போதைய சிக்கல், இதுபோன்ற கிறுக்கர்களின் மிரட்டல்கள் அல்ல. அரசியலில் இறங்க விரும்பும் ரஜினிகாந்தின் தலைமைத் தகுதி தான். நடிகர் என்பதை மீறி, தனது தனித்துவத்தை அவர் மேம்படுத்திக் கொண்டு களமிறங்கினால், அவருக்கும் நல்லது, தமிழகத்துக்கும் நல்லது.... [மேலும்..»]

அறிவிப்புகள்

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

அக்டோபர்-27  ஞாயிறு காலை 10 மணிக்கு.  திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) மற்றும் திரு. புரபுல் கேத்கர், ஆசிரியர், ஆர்கனைசர் வார இதழ்  –  கலந்து கொள்கின்றனர்.  இடம்: குஜராத்தி திருமண மண்டபம்.  அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.. [மேலும்..»]

அரசியல், நிகழ்வுகள்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இலங்கைத் தமிழரும் மாணவர் போராட்டங்களும்

இந்த மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும் என்றால், அதில் உள்ள பிரிவினைவாத கோஷங்கள் முற்றாக நீக்கப்பட்டு, ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்துவதாக இருக்க வேண்டும். எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், அடிப்படை சிவில் உரிமைகள் ஆகியவற்றையே மையமாக வலியுறுத்துவதாக இவை அமைய வேண்டும். ஆதரவு வட்டத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர குறுக்கக் கூடாது.... இவ்வளவு தூரம் தூண்டி விட்ட பின்னால், தேவையான அளவுக்கு போராட்டம் பெரிதானவுடன், அமெரிக்க அரசு அதே தீர்மானங்களின் கடுமை குறைத்து நீர்த்துப் போனதாக மாற்றுகிறது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த பேரம் என்ன? தேவையான... [மேலும்..»]