Posts Tagged ‘ பிற்போக்கு இஸ்லாம் ’

கன்னியின் கூண்டு – 3

August 31, 2013
By

இஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்..... முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 2

August 12, 2013
By

இஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்... தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்... இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை... [மேலும்..»]

கன்னியின் கூண்டு – 1

August 1, 2013
By

அயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.... எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல... [மேலும்..»]

[பாகம் 16] இஸ்லாமைவிட இந்துமதமே சிறந்தது – அம்பேத்கர்

இந்துக்களிடையேயும் சமூகத் தீமைகள் இருந்துவரவே செய்கின்றன. ஆனால் இவற்றில் ஓர் ஆறுதல் அளிக்கும் அம்சம் இருக்கிறது. அது என்ன? [மேலும்..»]