தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

திட்டமிட்ட ஒருங்கிணைந்த வெகுஜன மக்கள் தொடர்பை இலக்காகக் கொண்ட தேர்தல் ப்ரசாரம். ஆப்புக்கட்சி இந்த யுக்தியை முழுமையாக தில்லி தேர்தலில் உபயோகித்துள்ளது. பாஜக தரப்பில் இதன் சுவடு கூட காணப்படவில்லை என்பது கசப்பான உண்மை… ஃபோர்டு ஃபவுண்டேஷன், பரங்கிய க்றைஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போன்றோரின் பணக்குவியல்கள் மற்றும் ஆசீர்வாதப் பின்னணியில் ஹிந்துஸ்தான அரசியல் அரங்கில் மூக்கறுபட்ட போலி மதசார்பின்மையை தாத்காலிகமாக மீட்டெடுத்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் ஸ்ரீ கேஜ்ரிவால்… உண்மை பாதி உண்மை போன்று காட்சியளிக்கும் பொய் பாதி போன்ற காரணிகள் – லவ் ஜிஹாத், கர்வாப்ஸி, த்ரிலோக்புரி மற்றும் பவானா போன்ற சில இடங்களில் நிகழ்ந்த கலவரங்கள். இது போக தோல்வியுடன் சம்பந்தப்படாத கொசுக்கடிக் காரணிகளும் உண்டு…

View More தில்லி சட்டசபைத் தேர்தல் – ஒரு அலசல்

டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

டெல்லியில் தான் அனைத்து தேசிய அலுவலகங்களும், பன்னாட்டின் அலுவலகங்களும் உள்ளன என்பதும், தலைநகரின் பாதுகாப்பு, தேசத்தின் இமேஜை மற்ற நாடுகளுக்குக் காண்பிக்க, தலைநகரின் சட்ட ஒழுங்கைக் காக்க, தலைநகரின் மேம்பாட்டில் நலம் செலுத்த , நாட்டின் அனைத்து பெருந்தலைவர்களும் வசித்து வருவதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற நாடுகளின் embassy இங்குள்ளது என பல காரணங்களை முன்வைத்தே இதுவரையிலான மத்திய அரசுகள் டெல்லியை முழு மாநிலமாக அறிவிக்காமல் உள்ளது…முழு மாநிலமாக அறிவிக்க சட்டத் திருத்தம் தேவை. அதை பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றே நிறைவேற்ற இயலும். அதுவரையில் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட இயலாது. இதுவெல்லாம் தெரிந்தும் கெஜ்ரிவால் பல நாடகங்களை அரங்கேற்றுவார் என்பதை நாம் கண்கூடாகப் பார்ப்போம்….

View More டெல்லி ஏன் முழு மாநிலமாக அங்கீகாரம் பெறவில்லை?

சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

சீக்கியர்களை கண்ட இடங்களில் கொலை செய்யுங்கள். அவர்களின் சொத்துக்களும் பெண்களும் உங்களுக்கு இலவசம். ஒவ்வொரு தலைக்கும் என்னிடம் நூறு ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கொக்கரித்தனர் இந்த காங்கிரஸ் தலைவர்கள். கலவரக்காரர்களுக்கு தேவையான ஆயுதங்கள் நிதி ஆதாரம் மற்றும் சாராயம் ஆகியவை காங்கிரஸ் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சீக்கியர்கள் பதுங்கி இருக்கும் வீடுகளை காட்டவும், எங்கே அவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்பதையும் சொல்ல அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி நாடப்பட்டு செய்யப்பட்டது…இந்த வழக்குகளை விசாரிக்க மார்வா கமிஷன் தொடங்கி நானாவதி கமிஷன் வரை பத்து கமிஷன்களை அமைத்து தங்கள் கொலைத் தடங்களை அழித்து நீர்த்து போக செய்ய காங்கிரஸ் அனைத்து முயற்சிகளையும் செய்து சாதித்து விட்டது. அப்பாவி சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நீதி கிடைத்த பாடில்லை…

View More சீக்கிய இன அழிப்பும், காங்கிரஸின் அரசியலும்

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு…

View More லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

ஜனலோக்பால் இயக்கத்திற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடாக கேஜ்ரிவால் பயன்படுத்துவதாகவும் கூட அண்ணா குற்றம் சாட்டினார். அதெல்லாம் பழைய கதை. இப்போது கேஜ்ரிவால் பெற்றுள்ள வெற்றி அண்ணாவையும் சற்று யோசிக்க வைத்திருக்கிறது. ‘நான் தில்லியில் பிரசாரம் செய்திருந்தால் அரவிந்த் முதல்வராகி இருப்பார்’ என்று இப்போது கூறுகிறார் அண்ணா. வெற்றி, மனிதர்களை எப்படி மாற்றி விடுகிறது…, பாஜகவின் வழக்கமான ஆதரவாளர்கள் கூட உள்கட்சிப் பூசல்களால் வெறுத்துப் போயிருந்தனர். இந்த சமயத்தில் டாக்டர் ஹர்ஷவர்த்தனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி சூறாவளிப் பிரசாரம் செய்ததால் தான், பாஜக மயிரிழையில் முன்னணி பெற்று மரியாதையைக் காத்துக் கொண்டுள்ளது… தில்லியில் மறுதேர்தல் நடத்தப்பட்டால், பாஜக மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான புள்ளிவிவரங்கள் இவை. இந்தியா டுடே- சி.வோட்டர் அமைப்பு நடத்திய ஆய்விலும் இதுவே தெளிவாகி உள்ளது. இதை ஏற்க மனமின்றி பல ஊடகங்களும் பாஜகவை குறைவாக மதிப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றன….

View More ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

அந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்… இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?… குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு டில்லியில் மட்டுமல்ல, நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்….

View More தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

சோனியா காந்தியைப் போலவே நானும் மேலை நாட்டைச் சேர்ந்தவன், ஒரு கிறிஸ்தவன். சோனியாவைப் போலவே நானும் இந்தியாவில் பல வருடங்களாக வாழ்பவன்… முதலில் காங்கிரஸ் அரசு சாதி அடிப்படையில் இராணுவத்தினரைப் பற்றி ஒரு ஜனத்தொகை கணக்கு எடுத்தது. அது அவர்களிடையே ஒரு பிரிவினை உண்டாக்கவா அல்லது… இந்தியாவுக்கு அயல் நாடுகளிலிருந்து என்ன நன்மைகள் வந்த போதிலும் இந்து சமயத்தின் பழமையும், பெருமையும் மிக்க ஆன்மீக உணர்வுகளே உலகளவில் இந்தியாவின் தனித் தன்மைக்கு கைகொடுத்திருக்கிறது…(மூலம்: ஜான் மெக்லிதான்)

View More ஆட்சியில் இல்லாது மாட்சிமை கொள்ளும் மகாராணி

சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு

(எழுதியவர்: வி. சண்முகநாதன், பா.ஜ.க செயலர்) நம் நாட்டின் சாதாரண குடிமக்கள், ஐக்கிய முன்னணிக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன்சிங்கின் அமைதியான, சீரியசான, சிந்தனையில் ஆழ்ந்த முகத்தைப் பார்த்து ஏமாந்து போகிறார்கள். இப்படிப்பட்ட அப்பாவித்தனமான தோற்றத்துக்குப் பின்னே, சி.பி,ஐ யினை துஷ்பிரயோஒகம் செய்யும் கையும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

View More சி.பி.ஐயை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் அரசு