Posts Tagged ‘ புத்தகங்கள் ’

இந்து மதம்: நேற்று இன்று நாளை – புத்தக அறிமுகம்

கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படை வாதங்கள், கம்யூனிஸ அறிவுசார் பயங்கரவாதம் போன்ற அழிவு சக்திகள் என தொடர் தாக்குதல்களுக்கு ஆளான பிறகும் சனாதன இந்து தர்மம் நிலைபெற்று நிற்பதற்கான காரணங்கள். ஜாதி : மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு மிகவும் மோசமாக அவதூறு செய்யப்படும் இந்த (இந்து) சமூகக் கட்டமைப்பின் உண்மை மதிப்பீடு, மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள்... புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதி - கோட்சே குற்றவாளியா?... [மேலும்..»]

டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்

வட கிழக்குப் பகுதி தனது தனித்தன்மையை வன்முறைப் பிரிவினை என்ற அளவுக்குக் கொண்டு சென்றதால் அந்த முயற்சியில் எப்படிப் பரிதாபகரமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதை 'வடகிழக்கு ஆயுதப் போராளிகளுடன் ஒரு ரகசிய சந்திப்பு" என்ற இந்தப் புத்தகம் தெளிவாக விவரிக்கிறது. இதன் ஆசிரியர் தன் உயிரைப் பணயம் வைத்துச் செய்திருக்கும் பயணம் ஊடகச் செயல்பாடுகளுக்கு ஓர் நல்ல முன்னுதாரணம்... வடகிழக்கு பிரிவினைவாதிகள் அனைவரிடமும் இருக்கும் ஒரே ஒரு குறிக்கோள்: இந்தியாவே நம் எதிரி என்பதுதான். சீன, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பிராந்திய சக்திகளிடையே இருக்கும் இந்த உள் மோதல்களினால்தான் அவை தோற்றுவிட்டிருக்கின்றன. எனவே இதை இந்திய தேசியத்தின்... [மேலும்..»]

மகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்

January 3, 2014
By

உண்மையை ஒத்துக் கொள்வதென்றால் மகாபாரதம் எனக்கு உலகத்தின் தலை சிறந்த இலக்கியம். தர்க்கபூர்வமான, அறிவுபூர்வமான அணுகுமுறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அந்த உணர்வு. ஆழ்ந்த பித்து என்றே சொல்லலாம்...மகாபாரதத்தை மூலமாக வைத்து எழுதப்பட்ட புனைவுகள், எடுக்கப்பட்ட திரைப்படங்கள் மீது எனக்கு எப்போதும் ஒரு soft corner உண்டு. அப்படிப்பட்ட எல்லா இலக்கிய/கலை முயற்சிகளையும் ஒரு பட்டியல் போட வேண்டும் என்று எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசையும் உண்டு. இவை சுருக்கங்களாக இருக்கலாம், இந்திய மொழிகளில் பாரதத்தைக் கொண்டு போகச் செய்த முயற்சிகளாக இருக்கலாம், மறுவாசிப்புகளாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அவற்றை ஒரு பட்டியல் போடும் முயற்சியே இந்தக்... [மேலும்..»]

அஞ்சலி: மலர் மன்னன்

இரண்டு நாட்கள் முன் இருக்குமா? மலர்மன்னனிடமிருந்து வந்தது தொலை பேசி அழைப்பு ஒன்று. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கிக் கொண்டே தொலை பேசியை எடுத்தேன். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே, ”உங்க ரங்கநாதன் தெரு கட்டுரை நம்ம சென்னையில் வந்திருக்கு இந்த மாதம். பாருங்கோ நெட்லே கிடைக்கும். அச்சிலே வரதுக்கு நாளாகும்” என்றார். ”பாக்கறேன். ஆனால் நெட் கனெக்‌ஷன் போயிடுத்து” என்று கொஞ்சம் நிம்மதி அடைந்து அவருக்கு பதில் சொன்னேன். அவருக்கும் எனக்கும் இடையே சுமார் இருபது நாட்களுக்கும் மேலாக அவருடைய புத்தகம் “திராவிட இயக்கம், புனைவும் உண்மையும்” பற்றித் தான் பேச்சு. அது பெற்றுள்ள... [மேலும்..»]

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது. இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர்கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு... [மேலும்..»]

இந்துமதம் குறித்து மூன்று நூல்கள்

January 19, 2013
By

இன்றைய நவீன வாசகர்கள் பலர் இந்து மதத்தை வரலாற்றின் வழியாக, சமூக இயக்கங்களின் வழியாக, ஞான, தத்துவ விவாதங்களின் வழியாக அறிவதில் தான் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய வாசகர்களின் தேடலைப் பூர்த்தி செய்யும் நூல்கள் அத்தியாவசியமானவை. இந்த வருடம் சொல்புதிது பதிப்பகம் வெளியிட்டிருக்கும் மூன்று நூல்கள் இந்த வகையில் வரும்.... ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டை தீவிரமாக மறுதலித்தவர்களில், கேள்விக்கு உள்ளாக்கியவர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் , விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர், டாக்டர் அம்பேத்கர் போன்று கல்விப் புலங்களுக்கு வெளியே சமூக, ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்களே......”இந்து அடையாளம்”... [மேலும்..»]

வலுவான குடும்பம், வளமான இந்தியா: புதிய புத்தகம்

உயிர்ப்புள்ள குடும்பங்களே உறுதியான சமூகங்களையும் வலுவான பொருளாதாரத்தையும் உருவாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு சூத்திரம்போல் தோன்றினாலும் இதுவே சமூக வரலாற்று உண்மை. இந்தியக் குடும்பச் சூழலையும் அமைப்பையும் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பேராசிரியர் கனகசபாபதி, இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைவது குடும்ப சமூக அமைப்புகளே என்னும் முடிவுக்கு வந்து சேர்கிறார். நூலாசிரியர் மேற்கொண்ட நேரடிக் கள ஆய்வுகளும் சேகரித்த புள்ளி விவரங்களும் பிற தரவுகளும் அவருடைய இந்த முடிவை பலப்படுத்துவதாக அமைந்துள்ளன.... [மேலும்..»]

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்? ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது. கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச்... [மேலும்..»]

இந்துத்துவப் பதிப்பகம்: ஓர் அறிமுகம்

இந்துத்துவம் என்பது இந்த தேசத்தின் வாழ்வியல் முறை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்ட பிறகும், இன்றும் இந்துத்துவம் என்றாலே நம்மவருக்கும் கூட கசப்பாகவே இருக்கிறது. ... நமது வரலாற்றை, பண்பாட்டை சரியான படி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு லாப நோக்கமில்லாத ஒரு பதிப்பகத்திற்கான மிகப் பெரிய அவசியம் உள்ளது. இத்தகைய ஒரு பதிப்பகத்தை நாம் நன்கறிந்த எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களுமான அரவிந்தன் நீலகண்டன், ம.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்திருக்கின்றனர்... 2012 டிசம்பரில் கீழ்க்கண்ட பத்து புத்தகங்களை இந்துத்துவ பதிப்பகம் சார்பில் கொண்டுவர திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்?... [மேலும்..»]

புதுக்கோட்டை ஞானாலயா நூலகம்: அறிவுத் திருக்கோயில்

புதுக்கோட்டையில் திருகோகர்ணம் பகுதியில் உள்ள ஞானாலயா என்ற தனிநபர் நிர்வகிக்கும் நூலகத்திற்கு சென்றேன். ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய சமகாலத்தில் அதிகம் புழக்கம் இல்லாத, மறுபதிப்பு வராத புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள்... அழகாகப் பராமரிக்கப்பட்டு எவர் வேண்டுமானாலும் வந்து பயன்படுத்தும் அளவிற்குத் தன் சொந்தக் காசில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பாதுகாத்து வருகின்றார்.... இந்த நூலகம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் போகும் பட்சத்தில் நிச்சயம் அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை... மூன்று விதங்களில் நம்மால் உதவி செய்ய முடியும்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey