Posts Tagged ‘ புத்தக வெளியீடு ’

சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

தமிழகத்தை வாழ்விக்க வந்த  தவச்செல்வர்களில் முக்கியமானவர் சுவாமி சித்பவானந்தர் (1898 - 1985).  சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு குறித்து 2-3 சிறு நூல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. ஆனால் விரிவான வாழ்க்கை வரலாற்று நூல் இல்லை என்று இதுகாறும் ஒரு குறை இருந்து வந்தது.  யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்கள் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள  'வேதாந்தம் தந்த வீரத்துறவி - சுவாமி சித்பவானந்தர் வாழ்க்கை வரலாறு' என்ற நூல் அக்குறையைப் போக்கியுள்ளது.  மூன்று பாகங்களாக,  1500 பக்கங்களில், சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும்  விரிவாக இந்த நூல் விளக்குகிறது... [மேலும்..»]

திருக்குறள் கூறுவது தர்ம சாஸ்திரங்களே

திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது.. மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.. வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான... [மேலும்..»]

தமிழில் வீர சாவர்க்கரின் இரண்டு நூல்கள் புதிய வெளியீடு

தடாகமலர் பதிப்பகம் வீர சாவர்க்கர் எழுதிய இரண்டு புத்தகங்களைத் தமிழில் வெளியிடுகிறது. இந்துத்துவத்தின் அடிப்படைகள் (தமிழில்: எஸ்.ராமன்) மற்றும் அந்தமானிலிருந்து கடிதங்கள் (தமிழில்: ஓகை நடராஜன்). முன்பு வெளிவந்த 1857 முதல் சுதந்திரப் போர் அல்லது எரிமலை என்ற புத்தகத்தையும் இப்பதிப்பகம் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. மேலும் விவரங்கள் கீழே... [மேலும்..»]

வேதம் நிறைந்த தமிழ்நாடு: நூல் வெளியீடு

தொல்லியல் ஆராய்ச்சியாளரும் அறிஞருமான டாக்டர் ஆர்.நாகஸ்வாமி எழுதிய “Tamil Nadu – The Land of Vedas” என்கிற ஆங்கில நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 12-ம் தேதி சென்னையில் நடந்தது. "தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த கலாச்சாரம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான். சிறப்பு வாய்ந்த தமிழ்ப் பண்பாட்டிற்கு வேதத்தின் பங்களிப்பு அளவிலடங்காது. என்னுடைய இந்த நூலை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். முதல் பாகத்தில் தமிழகத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் வேதங்கள் ஆற்றிய பங்கை தமிழ் இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக நிறுவியுள்ளேன். புறநானூறு முதற்கொண்டு சங்ககால இலக்கியங்களில் ஆரம்பித்து தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளவற்றை ஆராயந்து சொல்லியிருக்கிறேன். இரண்டாம்... [மேலும்..»]

ஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா

இன்று (12 ஜூலை 2014) ‘ஆழி பெரிது’ நூல் நண்பர்களின் ஒரு சிறிய கூடுகையில் வெளியிடப்படுகிறது. இடம்:  திருவான்மியூரில் நடைபெறும் இந்து சேவை ஆன்மிக கண்காட்சி. தமிழ்ஹிந்து.காம் ஸ்டால் எண்: E1 நேரம்: 5:30 மணி மாலை எழுத்தாளர்கள்  திரு.ஜோ டி குரூஸ், திரு.பா.ராகவன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு.எஸ்.ராமச்சந்திரன், தத்துவ பேராசிரியர் அறிவழகன், சமூக சேவகர்கள் திரு.கணபதி, திரு.மணிகண்டன்,  தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு உறுப்பினர்கள் ம.வெங்கடேசன், ஜடாயு, ஓகை நடராஜன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.   [மேலும்..»]

மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு

சென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க. தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கோபி சங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை இன்று (10 ஜூலை 2014) வெளியிடுகிறார்.  காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த எளிய, ஆனால் சமூக பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு தமிழ்ஹிந்து அரங்கில் நடைபெறுவதில் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இதற்காக நூலாசிரியர் கோபி சங்கர் அவர்களுக்கும் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் தமிழ்ஹிந்து சார்பில் எமது நன்றிகள். அனைவரும் வருக! திரு. கோபி சங்கர் ஸ்ரீராமகிருஷ்ணர்,... [மேலும்..»]

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

ஹிந்து கண்காட்சியில் தமிழ்ஹிந்து புத்தக அரங்கு

கடந்த பிப்ரவரி 19 முதல் 24 வரை சென்னை மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சியில் தமிழ்ஹிந்து ஒரு புத்தக அரங்கை அமைத்துள்ளது. இந்துத்துவ பதிப்பகத்தின் வெளியிடுகளாக, ம.வெங்கடேசன் எழுதியுள்ள ”புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?”, ”தாழ்த்தப் பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?”, ”1947 – பாகிஸ்தானில் தாழ்த்தப் பட்டவர்கள்” ஆகிய நூல்கள் இந்த அரங்கில் கிடைக்கும். “பண்பாட்டைப் பேசுதல்”, “சாதிகள் – ஒரு புதிய கண்ணோட்டம்” ஆகிய நூல்களின் புதிய பதிப்புகளும் கிடைக்கும். அத்துடன் மற்ற பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள இந்துத்துவம், இந்து தர்மம், இந்துப் பண்பாடு, வரலாறு... [மேலும்..»]

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும் – புதிய நூல்!

உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்? ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது. கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச்... [மேலும்..»]

மலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா!

மலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா!

ஜுலை-23, திங்கள் மாலை 5.30 மணிக்கு திருவனந்தபுரம் கோட்டைக்ககம் கிருஷ்ணவிலாசம் அரண்மனை வெளிமண்டபத்தில் திருவாசம் – மலையாள மொழியாக்க நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. திரு. கே.ஜி சந்திரசேகரன் நாயர் அவர்கள் மொழியாக்கம் செய்த நூலை மன்னர் பத்மநாபதாசர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வெளியிடுகிறார். தமிழ், மலையாள அறிஞர்கள், சைவ சமய ஆசான்கள் கலந்து கொள்கின்றனர். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே. (படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்) [மேலும்..»]

கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

கும்பகோணத்தில் ‘உடையும் இந்தியா’ புத்தக அறிமுகக் கூட்டம்

நாள்: 25-02-2012, சனிகிழமை பிப்-25, சனிக்கிழமை மாலை 7 மணி. ராயா மகால், காந்தியடிகள் சாலை. பேராசிரியர். சாமி. தியாகராஜன், திரு. கிருஷ்ண பறையனார், திரு.ம. வெங்கடேசன் (எழுத்தாளர்), திரு. ம. ராஜசேகர் (வழக்குரைஞர்), திரு. B.R. ஹரன், (பத்திரிக்கையாளர்) திரு. அரவிந்தன் நீலகண்டன் (நூலாசிரியர்) கலந்து கொள்கின்றனர்... [மேலும்..»]