Posts Tagged ‘ புராணங்கள் ’

பாரதியின் சாக்தம் – 3

சக்தி வழிபாட்டைக் கூறவந்த சாக்தம் ஏன் வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் இடையே இருக்க வேண்டிய பரஸ்பர பாவங்களைப் பற்றிப் பேசுகிறது?... மகளிரைத் தேவியின் உருவங்களாகக் கண்டு வழிபடுவது என்பது விவேகானந்தரின் கருத்துப்படி அவர்களுக்குக் கல்வி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தன்னம்பிக்கை வளர்வதற்கான சூழ்நிலைகளை அமைத்துக்கொடுத்தல், வாழ்க்கையின் சரிநிகரான துணைவர்களாய் மதித்து நடத்துதல்... சக்தியைத் தாய் என்று போற்றும் தக்ஷிணாசாரம், துணைவி என்று கண்டு போற்றும் வாமாசாரம் இரண்டையும் ஒரே பாடலில் பாரதி இணைத்துப் பாடும் அழகு... [மேலும்..»]

பரிபூரணத்தின் அழகுவெளி – லலிதா சகஸ்ரநாமம்

October 16, 2010
By

லலிதா என்ற சொல்லே மிக அழகானது. நித்திய சௌந்தர்யமும், நித்திய ஆனந்தமும் ஒன்றான அழகு நிலை என்று அதற்குப் பொருள்.. அப்படி தியானம் செய்பவர்களுக்கு நிர்க்குணமும் சகுணமும், ஞானமும் பக்தியும் கர்மமும், வாமாசாரமும் தட்சிணாசாரமும், யோகமும் போகமும், கோரமும் சாந்தமும், இல்லறமும் துறவறமும் - எல்லாம் அன்னையின் உள்ளத்துக்கு உகந்ததாகவும், எல்லாமாகி இலங்கும் அவளை அடைவதற்கான மார்க்கங்களாகவே திகழும்... [மேலும்..»]

போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்

தலைகளின்றி முண்டங்களாகிக் கிடக்கும் பனைமரங்கள், வெறிச்சோடிப்போன வீதிகள், மிதிவெடி அபாயம், சொல்லி நிற்கும் வீதியோரப் பதாகைகள், உடைந்தும் கூரையின்றியும் இருக்கும் வீடுகள்… கடற்பேரலையால் ஆலயத்தினை நெருங்கவே முடியவில்லை. பெரும்போர் அலையும் ஷெல் வீச்சுக்களும் அழிவுகளும்கூட ஆலயத்தை– அதன் புனிதத்தை– அழிக்க முடியவில்லை... [மேலும்..»]

பாரதியின் சாக்தம் – 2

வாழ்வின் மூர்க்கத்தையும் கொடூரத்தையும் அழிவையும் ஸர்வநாசத்தையுமேகூட தெய்வத்தின் பிரதிமையாய்க் காணும் மரபு வங்காளத்தில் நிலவுவது சாக்தத்திற்கான வலுவான வேராகும்... 'நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டு வந்த நரேந்திரரை.. பல ஆண்டுகளுக்குப் பின் அதே 'நரேனைக் காளிக்கு அர்ப்பணம் செய்துவிட்டேன். நரேன் காளியை ஒப்புக்கொண்டு விட்டான் தெரியுமோ?' என்று ஏதோ தன் பிள்ளை பெரிய பரிட்சையில் பாஸானதைப் போல வருவோர் போவோரிடம் சொல்லிக்கொண்டிருந்த கிழவராக இருந்தவரும் ஸ்ரீராமகிருஷ்ணர்... [மேலும்..»]

பாரதியின் சாக்தம் – 1

பெண்ணின் சுதந்திரம் பெரிதும் முடக்கப்பட்டக் காலத்திலேயே கூட, பெண்ணின் சுதந்திர வெளியை முழுதும் உள்வாங்கிய உணர்வு பூர்வமான வழிபாடு அவனால் சாக்தமாகப் பேணப்பட்டு வந்திருப்பது பெரும் சிறப்பாகத்தான் இருக்கிறது... ஒரு கையால் வைணவத்தையும், ஒரு கையால் சைவத்தையும் தொட்டுக்கொண்டிருக்கும். 'இருவழிகளையும் ஒரு பார்வையால் நோக்கும்' தரிசனம் சாக்தம் எனலாம்... விவேகானந்தரிடம் ஸ்ரீராமகிருஷ்ணர், "...மக்களுக்கு ஏற்ற வழியன்று வாமாசாரம் போன்ற முறைகள். முறையான பக்தி நெறியே மக்களுக்கு நன்மை பயப்பது,” என்றாராம். [மேலும்..»]

தலபுராணம் என்னும் கருவூலம் – 6

வெளித்தோற்றத்தில் இந்த இரட்டைகளிடையே வேறுபாடு உள்ளதுபோலக் காணப்பட்டாலும், அவை ஒன்றையொன்று தழுவியே நிற்கின்றன. பாமரம், வைதிகத்தை நோக்கி முன்னேற, வைதிகம் பாமரத்தைத் தழுவி அணைத்துக் கொள்வதை, இந்துப் பண்பாட்டின் வெளிப்பாடுகளாகிய இசை, இலக்கியம், சமயம் ஆகிய அனைத்திலும் காணலாம்.... சிறுதெய்வங்களுக்குத் தலபுராணங்கள் ஏற்றம் தந்து விடுகின்றன. நாளடைவில் சிறுதெய்வங்களும் வைதிகக் கடவுளராகி வேதநெறியில் வழிபடத் தக்கோராக மாற்றம் அடைந்துவிடுகின்றனர். [மேலும்..»]

அச்சுதனின் அவதாரப் பெருமை – 2

September 1, 2010
By

ஸ்ரீமத் பாகவத புராணத்திற்குச் சாரமாக வடமொழியில் 1036 பாசுரங்களாகப் பாடினார். அதை குருவாயூர் திருத்தலத்தில் அரங்கேற்ற, இவர் பாடிய ஒவ்வொரு தசகத்துக்கும் (பத்துப் பாசுரங்களுக்கும்) குருவாயூரப்பனே தலையசைத்து வரவேற்றதாக இத்தல வரலாறு கூறும்... பிறந்த பெண் குழந்தை மெதுவாக அழுது கொண்டிருந்தது. கதவுகள் திறந்து கிடந்தன. அந்த இல்லத்திற்குள் வசுதேவன் சென்றார். அங்கே உம்மைப் படுக்கவைத்து விட்டு அங்கே இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு விரைவாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்... [மேலும்..»]

அச்சுதனின் அவதாரப் பெருமை

August 26, 2010
By

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். "நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை' என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?" என்று கேட்கலாம். [மேலும்..»]

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

கந்த புராணம் ஒரு தத்துவப்புதையல். இப்புராணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இதனை உணர்ந்து அனுபவிக்க வேண்டும். கந்தன் இளமையின் வடிவம். ஆற்றலின் நிலையம். என்றும் இளையான், எவர்க்கும் மிகப்பெரியான், என்றும் அழகியான் என்று சநாதன தர்மம் போலவே விளங்குபவன் அந்த ஸ்கந்தன் என்ற முருகன். [மேலும்..»]

தலபுராணம்: ஒரு கருவூலம் – 5 (எச்சரிக்கும் பழங்கதை)

உங்களுடைய வீரியம் முழுவதையும் பண்டாசுரன் கவர்ந்தான். அவன் வெளியில் இல்லை. உங்கள் ஒவ்வொருவருடைய உடலிலும் கலந்துள்ளான்... இந்நிலையில் யாங்கள் இங்கிருந்து என்ன பயன்? நின் தழலுருவத்தில் கலந்திடும் இன்பமே மேவுவம்” என்று கூறி செழுந்தழற் பிழம்பொளி எழுப்பினர்... ஒருக்கால் நிலைமை நம் கையை மீறி ஐயனும் அம்மையும் எல்லாவற்றையும் சங்காரம் செய்து, அழித்துப் போட்டுக் களேபரமாக்கி மீண்டும் புனருற்பவம் செய்வரேயானால், அந்த உக்ர வேள்வியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்ள விடுத்த அழைப்பு இது... [மேலும்..»]