
இறைவனைப் பற்றி வெறும் வார்த்தைகளால் அறிவது என்பது சர்க்கரை என்று வாசித்து அறிவது போன்றதாம். சர்க்கரையினை நாக்கில் வைத்து சுவைத்தாலன்றி அதன் முழு அனுபவம் கிட்டாது. “இறைவனை முழுமையாக அறிய முடியாது” என்பவன்தான் அவனை முழுக்க அறிந்தவனாவான். “இறைவனை முழுமையாக ஸ்தோத்கரிக்க முடியாது” என்றறிந்தவன்தான் அவனை முழுக்கப் புகழ்ந்தவனாவான் என்கிறது கேன உபநிஷத்.