
சீனாவின் சரித்திர பக்கங்களில் ஒரு மைல் கல்லாக மாறிவிட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை இத்தகையது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கக்கூடும் உங்களுக்கு. ரத்தமும் சதையுமாக வாழ்ந்த ஒரு மனிதனின் கதை. சீனாவை ஆண்ட Qing என்னும் அரச வம்சாவளியின் கடைசி பேரரசனாக பட்டம் சூட்டப்பட்ட ”பூ யி”-இன் வாழ்க்கையை சிதைவின்றி சித்தரிக்கிறது The Last Emperor திரைப்படம்.