அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் மாநில சட்டப்படி தான் குற்றம் என்பதால் மாநில நீதிமன்றங்களிலேயே பிரச்சினை முடிந்துவிடும். இங்கிருப்பது போல் காசு இருக்கிறது என்பதற்காக உச்சநீதிமன்றம் வரைக்கும் போய் வழக்கு நடத்தும் பஜனை எல்லாம் கிடையாது… இங்கிருப்பது போல் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரிப்பார்கள். அரசு வக்கீல் வாதாட மட்டும் வருவார் என்ற நிலை அங்கே கிடையாது. நீதித்துறையின் கீழ் தான் போலீஸும் மற்றைய துறைகளும் மாநில, மத்திய அளவிலே இயங்கும். நீதித்துறைக்கு தலைவராக ஒரு வக்கீல் இருப்பார். மாநில அளவில் அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்…. ஒரு சட்ட மீறல் நடக்கிறது என்றால் (உதா: ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களை ஏமாற்றுகிறது), உடனே அமெரிக்க மத்திய வியாபார கமிஷன் நடவடிக்கை எடுக்கும்.அவர்களாகவே தானாகவே முன்வந்து நீதிமன்றத்திலே அந்த கம்பெனி மேல் வழக்கு தொடுப்பார்கள்…

View More அமெரிக்க நீதித்துறையும் இந்திய நீதித்துறையும்

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!

கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன… சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது…. மேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா?….

View More சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!

தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

தங்கள் வாழ்க்கை மற்றும் உடல்களை தாமே அழுத்தந்திருத்தமாக அடக்கியாளும் உரிமையும் ஆற்றலும் பெற வேண்டி பெண்கள் மேற்கொள்ளும் கடுமையான முயற்சி நிச்சயமாக அரசியல் தன்மை உடையது தான். ஆனால் பெண்ணீய அரசியலும் அதன் தன்மைகளும் நமது அரசியல் கட்சிகளின் குறுகிய உலகத்தை விட பரந்தது… கற்பழிப்பு என்பது காமம் அல்லது கலவியைக் குறித்த விஷயம் அல்ல. மாறாக அது பெண்களின் ஆற்றல், சிறப்புரிமை மற்றும் அதிகாரபூர்வமான உரிமை ஆகியவற்றை பாதிக்கக்கூடியது என்பது குறித்து நாம் காலம் காலமாக பேசி வந்துள்ளோம்… இத்தருணத்தில் மௌனமாக வாளாவிருக்க நான் விழைந்திருந்தால்,என்னால் என்னையே நேரிட்டிருக்க முடியாது என்பது மாத்திரம் அல்ல, தலைமுறைகளாக முழு முனைப்புடன் செயல்பட்டு பெண்ணீய இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று புதுப்பிக்கும் அந்த நெஞ்சுரம் கொண்ட பெண்களையும் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும்…

View More தெஹல்கா பாலியல் தாக்குதல்: பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்

தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்

அந்தப் போலீஸ்காரர் தன்னுடைய தாயையோ, சகோதரியையோ, மனைவியையோ அப்படி அடிப்பாரா, அல்லது வீசி எறிவாரா என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். காரணங்களைக் குறித்து அலசுவதை விட, நடந்துவிட்ட காரியங்களிலுள்ள நியாய அநியாயத்தைக் குறித்துத்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்… இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்திய போலீசார் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்களைக் கண் மண் தெரியாமல் அடித்துத் துவைக்க என்ன வெறி காரணம். இவர்களை இந்த வேலைக்கு எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்?… குற்றவாளிகள் செய்த கொடூர பாதகச் செயலுக்குத் தக்க தண்டனையை உடனடியாக அவசரகால நீதிமன்றத்தில் தினந்தினம் விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களுக்கு டில்லியில் மட்டுமல்ல, நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்….

View More தில்லி சம்பவம்: போராட்டங்களும் அடக்குமுறைகளும்